சித்த மருத்துவம் | Siddha Maruthuvam PDF In Tamil

‘சித்த மருத்துவம்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Siddha Maruthuvam’ using the download button.

சித்த மருத்துவம் – Siddha Maruthuvam Tamil PDF Free Download

சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் / Siddha Maruthuvam PDF

சித்த மருத்‌ ம்‌ இள ம்‌ மக்‌ ய பிணி தீர்க்கும்‌ மருச்‌ க வளர்ந்து வந்துள்ளதைப்‌ பெருமையுடன்‌ நாம்‌ ஏற்றுக்கொள்வோம்‌. தொல்காப்பியர்‌, திருவள்ளுவர்‌, திருமூலர்‌ வாழ்ந்த காலத்திற்கு முற்பட்டு பன்னெடுங்காலமாக நிலைத்து நிற்கும்‌ தமிழர்‌ நாகரிகத்தின்‌ ஓர்‌ அங்கமே தமிழ்‌ (சித்த) மருத்துவம்‌. வடமொழி ஆரிய நாகரிக வளர்ச்சிக்கு அடிகோலியது.

அந்த நாகரிகத்தின்‌ ஓர்‌.அங்கமே ஆயர்வேதம்‌. காலம்‌ நாகரிகத்தின்‌ தனித்தன்மையைத்‌ துளைத்து மொழியையும்‌, இனங்களையும்‌, கலைகளையும்‌, சங்கமிக்கச்‌ செய்தது வரலாறு ஆயிற்று. இன்று தமிழ்‌ மண்ணில்‌ கலாச்சார சங்கமங்களைத்தான்‌ பார்க்கிறோம்‌ ஆயினும்‌ தனித்தள்‌ குன்றாமல்‌ மினி! சித்த மருத்துவமே என்றால்‌ அது மிகையாகாது.

இதனால்தான்‌ மத்திய அரசு நம்‌ நாட்டின்‌ மருத்துவ முறைகளைச்‌ சீர்படுத்தும்‌ முடிவோடு, சித்த மருத்துவத்தை ஒரு தனி மருத்துவமாக. ஆயுர்வேதத்தினின்றும்‌ வேறுபட்ட மருத்துவமாக ஏற்றுக்‌ கொண்டுள்ளது. இந்திய மருத்துவ sowws Gap (Central Council of Indian Medicines என்ற அமைப்பில்‌ ஆயுர்வேதம்‌, சித்த மருத்துவம்‌, யுனானி மருத்துவம்‌.

யோகம்‌ இயற்கை மருத்துவம்‌ என்பன தனித்தனி அங்கங்களாகத்‌ திகழ்கின்றன பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆய்வுகள்‌ தொடர்பான படிப்பு. ஆகிய துறைகளும்‌ தனியாகவே உள்ளதால்‌, நம்‌ நாட்டூ மருத்துவ முறைகள்‌ வளர்ச்சியடை ப இந்த அமைப்புகள்‌ உதவுகின்றன.

உலகளாவிய மருத்துவ முறையாகச்‌ சித்த மருத்துவர்‌ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில்‌, நம்‌ மருத்துவத்தின்‌ அடிப்படைத்‌ தத்துவத்தில்‌ தொடங்கி, நோய்கள்‌, அவற்றின்‌ கணிப்பு முறை. மருத்துவம்‌. ௩ பேணும்‌ தற்காப்பு முறை. உணவு, நோயில்லா நெறி. உள ஒழுக்க இயல்‌ உடலைப்‌ பேணும்‌ இயல்‌ என்று பல நோக்குகளில்‌ ஆய்வு செய்யப்பட்டு. அலை தெளிவான அறிவார்ந்த நூல்களாக வெளிவரவேண்டும்‌. இந்த உ.பரிய

நோக்கத்தைக்‌ கருத்தில்‌ கொண்டு தமிழ்‌ வளர்ச்சிக்‌ கழகம்‌, சித்த மருத்துவ நூல்களை வெளியிட முன்வந்துள்ளது, நம்‌ மருத்துவத்திற்கு மேலும்‌ பெருமை சேர்க்கின்ற செயலாகும்‌. வருங்காலத்திலும்‌ நமது மருத்துவம்‌ போற்றப்பட வேண்டும்‌ என்கிறார்‌ கழகத்‌ தலைவர்‌ பேராசிரியர்‌ வா.செ.

குழந்தைசாமி அவர்கள்‌. அவரது கருத்தே தமிழ்‌ வளர்ச்சிக்‌ கழகத்தின்‌ கருத்து என்று கூறுவது மிகையாகாது. சித்த மருத்துவ நூல்களை வெளியிட அமைக்கப்பட்ட குழுவின்‌ ஒருங்கிணைந்த பணி மிகவும்‌ மகத்தானது. அவ்வாறே இந்த மூன்றாம்‌ தொகுதியும்‌ உள்ளது. இத்தொகுதியில்‌ காயகற்பம்‌ முதல்‌ பகுதியாக அமைந்துள்ளது உடம்பினாலன்றி உணர்வுகானில்லை” “கற்பத்தையுண்டால்‌ காயமழியாது’ எனும்‌ உடலைப்‌ பேணும்‌ பொன்மொழிகள்‌ பல திருமூலரின்‌ திருமந்திரத்தில்‌ கூறப்பட்டுள்ளன. உயிரை உயர்நிலைப்படூத்தத்‌ தவமிருக்கும்‌ முனிவர்களுக்கும்‌, யோகிகளுக்கும்‌ கூறப்படுவதல்ல காயகற்பம்‌.

‘உணவேமருந்து, மருந்தே உணவு’ என்கிற கொள்கையே இங்குக்‌ காயகற்பமாகக்‌ கூறப்படுகின்றது. தாவரப்‌ பொருட்கள்‌, கனிமப்‌ பொருட்கள்‌, இறைவனால்‌ படைக்கப்பெற்ற உயிரினங்கள்‌, அவற்றின்‌ கழிவுகள்‌ யாவுமே காயத்தைக்‌ கற்பமாக்குபவை. காயத்தைத்‌ துறந்து உயிரைப்பேண இயலாது.

ஆகவே உடம்பும்‌ வளர வேண்டும்‌. உயிரும்‌ வளர வேண்டும்‌ என்கிறது சித்த ்‌ ம்‌. உடம்பை ந்தே உயிர்‌ ர்த்தேள்‌ என்கிறார்‌ திருமூலர்‌. உயிர்‌ வளர்வது என்பது உயிரை மேம்படுத்துவது என்று கொள்ளல்‌ வேண்டும்‌. இதுவே யோகமுறை. காய்கற்பம்பகுதியில்‌ எளிய முறைகள்‌ பல கூறப்பட்டுள்ளன.

முப்பு, அமுரி, கற்ப மூலிகைகள்‌, அமுரிதாரணை, கற்பம்‌ உண்ணும்‌ காலத்தில்‌ கடைப்பிடிக்க வேண்டிய கட்டூப்பாடுகள்‌, வழலை வாங்கல்‌, பழ மலம்‌ நீக்கல்‌, அஞ்சனம்‌, ஆக்கிராணம்‌ என்கிற முறைகள்‌ இப்பகுதியில்‌ விரிவாகக்‌ கூறப்படுகின்றன. கருவூரார்‌ வாதகாவியம்‌ 700, திருமூலர்‌ திருமந்திரம்‌, சட்டமுனி வாதகாவியம்‌ 1000, போகர்‌ கற்பம்‌ 300 எனும்‌ நூல்களிலிருந்து மேற்கோள்கள்‌ காட்டப்பட்டுள்ளன. கடுக்காயின்‌ சிறப்பை அறியாதவர்களுக்கு இந்நால்‌ அரியதோர்‌ வாய்ப்பு.

இப்பகுதிக்கு ஆதாரமான நூல்களில்‌ முதன்மையானது மரு. ஆர்‌. தியாகராஜன்‌ எழுதிய சித்த மருத்துவம்‌ (சிறப்பு) என்னும்‌ நூல்‌. அவர்கள்‌ எனக்கும்‌ எனக்குப்‌ பின்‌ வந்த இரு தலைமுறை பட்டதாரிகளுக்கும்‌ ஆசான்‌.

அவரது நூல்‌ சித்த மருத்துவக்‌ கல்லூரிகளில்‌ பாடப்புத்தகமாக உள்ளது. பல்வேறு நூல்களினின்று திரட்டி, தனது அனுபவத்தினையும்‌ கூட்டி, பேராசிரியர்‌ மரு. ஆ. குமரவேல்‌ இப்பகுதியை அளித்துள்ளார்‌. போகம்‌ என்ற பகுதியை மரு. ஆர்‌.எஸ்‌. இராமசுவாமி எழுதியுள்ளார்‌.

இவர்‌ பாளையங்கோட்டை சித்த மருத்துவக்‌ கல்லூரியில்‌ உடல்‌ தத்துவம்‌, சிறப்பு மருத்துவம்‌ மற்றும்‌ யோக விரிவுரையாளர்‌. யோக சாதனைகளைப்‌ பற்றி ஆன்றோர்‌ பலரது கருத்துகளையும்‌ அனுபவங்களையும்‌ இப்பகுதியில்‌ விளக்கியுள்ளார்‌. ஆணவம்‌, கன்மம்‌, மாயை எனும்‌ மலங்கள்‌ ஆன்ம தரிசனத்துக்கு எவ்வாறு இடையூறு செய்கின்றன என்பதையும்‌ புரியவைக்கிறார்‌ ஆசிரியர்‌. யோகத்தின்‌ எண்‌ (எட்டு) நிலைகள்‌ விரிவாகக்‌ கூறப்படூவதுடன்‌, ஆசனம்‌ பயில்வோர்க்கான விதிமுறைகளும்‌ விளக்கம்‌ பெறுகின்றன.

யோகாசனம்‌ செய்முறை விளக்கப்படங்களுடன்‌, அவ்வகை ஆசனம்‌ செய்வதனால்‌ ஏற்படும்‌ நன்மைகளும்‌ தெளிவாகக்‌ கூறப்படும்‌ பாங்கு ஆசிரியரின்‌ அனுபவம்‌ பேசுவது போலுள்ளது. பிராணாயாமம்‌ (மூச்சை வசப்படுத்தல்‌), பிரத்யாகாரம்‌ (புலனை வசப்படுத்தல்‌), தாரணை (மனதை ஒருமைப்படூத்தல்‌) யோகத்தின்‌ ஏழாம்‌ நிலையான தியானம்‌, இறுதி நிலையான சமாதி என வரிசைப்படுத்தி விளக்கியு ஈளார்‌ ஆசிரியர்‌. மாணவர்களுக்கு மட்டுமின்றி, யோக சாதனையாளர்களுக்கும்‌.

சன்மார்க்க போதகர்களுக்கும்‌ இப்பகுதி பெரிதும்‌ உதவும்‌. மேலும்‌ ஆய்வாளர்கள்‌ அறிய வேண்டிய கருத்துகளும்‌ நிறைய கூறப்பட்டுள்ளன. AG MEO என்னும்‌ தலைப்பில்‌ தனியாக ஒரு பகுதி வருவது, சித்த மருத்துவத்திற்கு மேலும்‌ சிறப்பூட்டுகிறது. வர்மக்கலை குறிப்பாக. கிழக்கு ஆசிய நாடூகவில்‌ காலங்காலமாகப்‌ பயிற்றுவிக்கப்படுவதுடன்‌, மேல்‌ நாட்டார்‌ அனைவரை,.பும்‌ இக்கலை ஈர்த்துள்ளது என்பதையும்‌ நாம்‌ அறிவோம்‌.

ஆயினும்‌ சித்த மருத்துவத்தை அடிப்படையாகக்‌ கொண்டூள்ளதே ‘வர்மக்கலை’ எனக்கூற வேண்டூமாயின்‌ சான்றுகள்‌ தெளிவாகக்‌ கிடைக்கவில்லை. தென்‌ குமரி நாட்டின்‌ சிறப்பே வர்மக்கலை. தென்‌ குமரியும்‌. கேரளத்தின்‌ தென்‌ மண்ட லமும்‌ குமரி நாட்டில்‌ அடக்கம்‌ என்ற கருத்துகளை நோக்கும்போது. வர்மக்கலை வளர்ந்த சூழ்நிலை குமரிக்கண்டத்தைச்‌ சுட்டிக்‌ காட்டுகிறதோ எனவும்‌ எண்‌ ணத்‌ தோன்றுகிறது. எவ்வாறாயினும்‌, செறிந்த பாரம்பரியம்‌ உள்ள கலை வர்மக்‌ கலை என்பதை ஆய்வாளர்கள்‌ ஒப்புக்‌ கொள்கின்றனர்‌.

யூகிமுனிவர்‌ இந்நோயின்‌ இலக்கணங்களைத்‌ தெளிவாகக்‌ கூறியதுடன்‌ மருத்துவமும்‌ கூறியுள்ளார்‌. இவரது நால்‌ ஒன்றே இன்று நம்மிடையேயுள்ள சித்த மருத்துவ நூல்களில்‌ சிறப்பாக விளங்குகிறது. பெருநோய்‌ என்பதைக்‌ குட்ட நோயை (1.ஜா௦8) மட்டுமே குறிக்கும்‌ சொல்லாக ஏற்றுக்கொள்ள இயலாது.

ஏனெனில்‌, பல்வகையான தோல்‌ நோய்களின்‌ பகுப்புகள்‌ இந்நோய்க்‌ கூட்டத்தில்‌ அடங்கியுள்ளன. யூகி நூலின்‌ வாயிலாக இன்று நம்‌ மருத்துவத்தில்‌ அறியப்படுகின்ற வெண்படை, காளாஞ்சகப்படை, சொறிப்படை, ஒட்டுப்படை, கடுவன்‌ போன்ற நோய்களும்‌ இப்பகுப்பில்‌ அறியப்படுகின்றன. தெளிவான குறிகுணங்களுடன்‌ இந்நோயின்‌ பிரிவுகளை யூகியின்‌ நூல்‌ விளக்குகின்றது. ஆய்வாளர்களுக்கு இந்நூல்‌ இன்று பெருமளவில்‌ பயன்படுகின்றது என்பதையும்‌ இங்கே கூறவேண்டும்‌.

ஆக, பெருநோய்‌ என்பதைக்‌ குட்டம்‌ எனக்‌ கருதாமல்‌ யூகியின்‌ கருத்தைச்‌ சார்ந்து ஆய்வு செய்தல்‌, ஆய்வாளரின்‌ இன்றைய பணியாகும்‌. நூலில்‌ உள்ளபடி எடுத்து விளக்கியுள்ளார்‌ மரு.எஸ்‌. இராஜலட்சுமி. காளாஞ்சகப்படை எனும்‌ தலைப்பில்‌ உள்ள கட்டுரை எனது பங்களிப்பு. சித்த மருத்துவத்தில்‌ மிகச்சிறந்த ஆய்வுகளில்‌ முதன்மையாகக்‌ கருதப்படும்‌ ’77 ஆயில்‌’ எனும்‌ எண்ணெய்‌ எனது கண்டுபிடிப்பு.

இது காளாஞ்சகப்படைக்குப்‌ பயனாகிறது. சென்னை மத்திய சித்த மருத்துவ ஆய்வு நிலையத்தில்‌ மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள்‌ பின்னர்‌ காப்புரிமம்‌ செய்யப்பட்டுள்ளன. காளாஞ்சகப்படை நோயின்‌ முற்குறி, நோய்‌ வரும்‌ வழி, நோயின்‌ இயல்பு. வகைகள்‌ என விரிவாகக்‌ கூறப்பட்டுள்ளது. மருத்துவ முறைகள்‌ விளக்கப்பட்டூுள்ளன. பயனுள்ள கட்டுரையாக அமைந்துள்ளது. இப்பகுதியில்‌ “தோல்‌ புற்று”, “வெண்படை”, ‘புழுவெட்டூ’, ‘காணாக்கடி’, *தேமல்‌’ என்னும்‌ ஐந்து வகையான நோய்களைப்‌ பற்றியும்‌ மரு.

எஸ்‌. இராஜலட்சுமி அவர்களே எழுதியுள்ளார்‌. மேலும்‌ ‘படர்தாமரை’, ‘படுக்கைப்புண்‌’, ‘கரப்பான்‌’. “சேற்றுப்புண்‌”, ‘முடிஉதிரல்‌’, ‘பொடூகு’, “அக்கி”, “தழும்பு’, பாலுண்ணி”, ‘பேன்கள்‌’. என்னும்‌ பத்து வகையான நோய்களைப்‌ பற்றியும்‌ மரு. கோ.

தியாகராஜன்‌ அவர்கள்‌ விவரித்துள்ளார்‌. தோல்‌ புற்று என்ற தலைப்பில்‌ புற்று நோய்‌ வகைகளை ஆதாரங்களுடன்‌ விளக்குகிறார்‌ ஆசிரியர்‌. தேரையர்‌ வைத்திய காப்பியம்‌ 1500, புலிப்பாணி வைத்தியம்‌ 500, தேரையர்‌ வைத்தியம்‌ 1001, அகத்தியர்‌ செந்தூரம்‌ 300, அகத்தியர்‌ வைத்திய காவியம்‌ 1500, அகத்தியர்‌ பள்ளு 2000, போகர்‌ 7000.

யாகோபு வைத்திய சிந்தாமணி, புலத்தியர்‌ வாத சூத்திரம்‌, யாகோபு லோக செந்தூரம்‌, போகர்‌ சத்த காண்டம்‌ எனப்‌ பல நூல்களிலிருந்து மருத்துவக்‌ குறிப்புகள்‌ எடுக்கப்பட்டு, பல்வேறு நிலை புற்றுகளுக்கு மருத்துவம்‌ கூறப்பட்டுள்ளது. இது ஆய்வுக்கு மிகச்‌ சிறந்த உதவியாக இருக்கும்‌.

வெண்படை என்ற தலைப்பில்‌ கூறப்படும்‌ நோய்‌, பதினெண்‌ குட்டங்களில்‌ ஒன்று என யூகிமுனி பெருநூல்‌ 800 கூறுகிறது. குறிகுணங்கள்‌ தெளிவாக பிவரிக்கப்படுகி புற 5 DB i ள்‌ எனப்‌ பிரிக்கப்பட்டு, அவற்றின்‌ வழக்கு மருத்துவமும்‌ கூறப்படுகிறது. வெண்படை ஆய்வுகள்‌ பற்றிய குறிப்புகளும்‌ உள்ளன.

கரம்பான்‌ நோய்‌ விரிவாக வகைப்படுத்தப்பட்டு, மருத்துவமும்‌ கூறப்பட்டுள்ளது. இவை எளிய மருத்துவமாக அமைந்துள்ளன. ப்மூவெட்டு, காணாக்கடி, தேமல்‌ ஆகிய தலைப்புகளில்‌ வழங்கப்பட்டுள்ள கட்டுரைகள்‌ தனித்தனியே சிறப்பாக உள்ளன. மரு. ஆர்‌. இராஜலட்சுமியின்‌ ஆய்வுத்திறனும்‌, அனுபவமும்‌ இக்கட்டுரைகளில்‌ நிறையவே வெளிப்படுகின்றன.

அக்கி, பாலுண்ணர்‌, படர்தாமரை, படுச்கைப்புண்‌, சேற்றுப்புண்‌, என்ற வகையில்‌ நோய்கள்‌ சித்த மருத்துவ முறைப்படியும்‌, நவீன மருத்துவ முறைப்படியும்‌ அறியப்பட்டு, சித்த மருத்துவ முறைப்படி மருந்துகள்‌ கூறப்பட்டுள்ளன. சில மருந்துகளை ஆய்வுக்குரிய மருந்துகளாகத்‌ தேர்வு செய்யலாம்‌. தமும்புகசர்‌ பற்றிய கட்டுரையில்‌ கூறப்பட்ட மருத்துவம்‌ எளிமையாக உள்ளது.

அவரவர்‌ வீடுகளிலேயே மருந்துகளைச்‌ செய்து கொள்ளலாம்‌. முழி உதிரல்‌, பொடுகு, பேன்கள்‌ என அடூத்த கட்டுரைகளில்‌ கூறப்பட்டுள்ளன. எளிய மருத்துவமும்‌ உள்ளது. சித்த மருத்துவ நூல்‌ வரிசையில்‌, சிறப்புப்‌ பகுதியாக அமைந்த இத்தொகுதிக்கு: ஒருங்கிணைப்பாளராக இருக்கும்‌ வாய்ப்பினை நல்கிய தமிழ்‌ கட்‌ உரிய த்தில்‌ எழுதிக்‌ கொடுத்த சித்த எதன்‌ ] ஆசிரியர்‌ பெருந்‌ ளுக்கும்‌, திருத்தர்‌ செய்து கொடுத்த மரு. ட நெ. தெய்வநாயகம்‌: அவர்களுக்கும்‌ மரு. கு. கணபதி ய ந்த நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

Language Tamil
No. of Pages279
PDF Size40.3 MB
CategoryHealth
Source/Creditstamildigitallibrary.in

Related PDFs

Ayurved PDF By Baidyanath In Hindi

ఆయుర్వేదయోగ ముక్తావళి PDF In Telugu

आयुर्वेदिय: औषधिगुण धर्मशास्त्र PDF In Hindi

Ayurveda Yoga Sindhu PDF In Telugu

Fireworks PDF In Tamil

Description Of Naladiyar Songs PDF In Tamil

Tamil Vidu Dutu PDF In Tamil

Source Mantras PDF In Tamil

சித்த மருத்துவம் /Siddha Maruthuvam Tamil Book PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!