‘ஆத்திச்சூடி’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Fireworks’ using the download button.
ஆத்திச்சூடி – Fireworks PDF Free Download

ஆத்திச்சூடி PDF
தமிழுலகில் மகாவித்துவான் என்றால் திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் திருப் பெயரே முள்ளிற்கும். அதுபோலவே சேதுசமத்தான மகா வித்துவான் என்றால் ரா. இராகவையங்கார் நம் எண்ணத்தில் முற்படுவார்.
எத்தனையோ மகாவித்துவான்கள் சேது வேந்தர் அவையை அலங்கரித்த போதிலும் ரா. இராகவையங்கார் அம் மகாவித்துவான்களுள்ளே முன்னணியில் வந்து நிற்கிறார்.
மகாவித்துவான் ரா. இராகவையங்கார் . 20-9-1870ல் . தோன்றினார். இவர் பிறந்த ஊர். சிலகங்கைச் சீமையைச் சார்ந்த தென்னவராயன்’, புதுக்கோட்டை. இவருடைய தந்தையார் இராமா துஜையங்கார்; தாயார் பதுமாசனி அம்மையார், இவர் பிறந்த கோத்திரம் நைத்துருவகாசிப் கோத்திரம் ஆகும்.
இளமையில் ஐந்தாம் வயதிலேயே தம் தந்தையாரை இழந்தார்.இராகவையங்கார். இவருடைய தாய்மாமனார் சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் இராமநாதபுரம் சமத்தாளத் தில் அரசவைப் புலவராய் அந் நானில் சிறப்புடன் விளங்கினார். இவர் தமிழிலும், வடமொழியிலும், கன்னடம் முதலிய பிற மொழிகளிலும் வல்லவர்.
சதாவதானி என்பது இவர்தம் கல்வி யின் மிகு சிறப்பால் பெற்ற விருதுப் பெயராகும். இத்தகு பெருமை பல கொண்ட தாய்மாமனாரின் ஆதரவில் இராக வையங்கார் இராமநாதபுரத்தில் ‘சுல்வி பயின்றார். மெட்ரிக் குவேசன் வரை பள்ளிக்கல்வி பெற்றதோடு தம் அம்மானிடமும் சமந்தானப்புலவர்களிடத்தும் தமிழும் வடமொழியும் பயின்றார். இளமையிலேயே கூறிய அறிவும் கவிபாடும் திறமையும் பெற்று இவர் விளங்கினார்.
இராகவையங்கார். தம் 18 ஆம் அகவையிலேயே மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணிபுரியத் தொடங்கினார். இச் சமயம் ஜானகி அம்மாளை வாழ்க்கைத் துணையாகப் பெற்றார். திருச்சியில் உள்ள சேஷையங்கார் பள்ளியிலும் சிலகாலம் இவர் தமிழாசிரியராக இருந்தார்.
மாண்புமிகு பாஸ்கர சேதுபதி மகாராசா அவர்கள் இராகவையங்காருடைய புலமைத் திறத்தை மெச்சித் தம் அவையில் தலைமை மகாவித்துவாளாக்கினார். இவருக்குப் பல்லக்கு முதலிய வரிசைகளையும் நல்கினார். சமத்தான தர்ம மகமை நிதியிலிருந்து பசலிதோறும் ஆயுட்கால பரியந்தம் ரூபாய் 635 சம்மானமாகத் தரவும் உரிமைப் பத்திரம் பதிவுசெய்து தந்துள்ளார்.
அப் பத்திரத்தில் இராகவையங்கார் அவர்களுடைய பலதுறைப் புலமையையும் பாஸ்கர சேதுபதி அவர்கள் எடுத் துரைத்துப் பாராட்டியிருப்பது ஈண்டுக் காணத்தக்கதாம்.”நமது சமஸ்தானத்தில் பிறந்து வளர்ந்து நமது சமஸ் தாளத்து அன்னப் பிரபாவத்தினாவேயே தமிழ்க்கல்வியில் பூரண பாண்டித்தியமுடையராய், ராவ்பகதூர் பி.
அரங்கநாத முதலியார் முதலிய பல கல்வியிற் பெரியோர்கள் மிகச்சிறப்பித்து எழுதிய மகாவித்துவாளாய் அதேசு வருடங்களாக நமது சமஸ் தானத்துத் தலைமைத் தமிழ் வித்வானாயுள்ள தாங்கள் தமிழ் நூலுரைகள் முதலியன செய்கின்றதனாலும் தமிழிலுள்ள அரிய பெரிய விஷயங்களைப் பலர்க்கும் உபந்நியசித்தலாலும் அனேகர்க்குப் பூர்விகத் தமிழ்ப்பாஷையைப் போதித்து வருதலா லும் கிடைத்தற்கருமையாயுள்ள பழைய தமிழ் நூல்களைத் தேடிச்சேர்த்தலாலும் அவற்றைப் பரிசோதித்தலாலும் வெளி யிடுதலாலும் இன்னும் பல
நன்முயற்சிகளாலும் தமிழ்ப் பாஷையை நன்றாய் வளர்ப்பவர்களாயும் நமது சமஸ்தானத்துச் செந்தமிழ்ப் பரீக்ஷாதிகாரத் தலைவராயும் நமது சமஸ்தானத்து வித்வத் அங்கத்தில் பரம முக்கியராயும் இருந்தலை ஆலோசித்து திரமான சம்மானமான இப் பத்திரத்தின் மூலம் நம்மால் கொடுக்கலாயிற்று” இப்பத்திரத்தில் பாஸ்கர சேதுபதி அவர்கள் இராக வையங்கார் அவர்கள் தமிழ்ப் புலமையிலும் தமிழ்ப்பணியிலும் சேது சமஸ்தானத்தில் எவ்வளவு சிறப்புடையராய் விளங்கினாள் என்பதனை எடுத்துக்காட்டியிருத்தல் காணலாம்.
சேதுவேந்தர் பேரவைக்கு வடமொழி, தமிழ், இசை முதலிய பல துறைகளிலும் வல்ல பெரும்புலவர்கள் அடிக்கடி வந்து தத்தம் கல்வித்திறத்தை வெளிப்படுத்திப் புகழொடும் சேதுபதிகளிட மிருந்து பெற்ற பெரும் பொருனொடும் திரும்பிச் செவ்வது வழக்கமாயிருந்தது. அக் காலங்களில் இராகவையங்காரும் உடனிருந்து மகிழ்ந்து தம் கல்வி நலனைப் பலரும் வியக்கும் வண்ணம் வெளிப்படுத்தியும் வந்தார். இத்தகு கல்வியனுபவம் பிற்காலத்தில் அவருக்குப் பெரியதோர் துணையாய் அமைந்தது.
சேதுசமத்தானவித்துவானாக இவர்கள் விளங்கிய காலத்தில் தான் சுவாமி விவேகானந்தர் அங்கு வந்து சேதுபதிகளின் ஆதர வினால் மேல்நாடுகளுக்குச் சென்று திரும்பினார். சுவாமி விவேகானந்தர் போன்ற பெரியோர்களின் பழக்கம் இவருக்கு ஏற்பட ஒரு வாய்ப்பாயிற்று. சேதுபதியை நாடிவந்து பொருளுதவி பெற்ற புலவர் பெருமக்கள் பலராவர். அப் புலவர்களுடனும் கலந்து பழகும் வாய்ப்பும் இவருக்கு நேர்ந்தது.
பாஸ்கர சேதுபதிகளின்ஆதரவில் பாண்டித்துரைத் தேவரவர் கனின் முயற்சியால் மதுரை மாநகரில் தமிழ்ச் சங்கம் 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் நிறுவப்பெற்றது. இச் சங்கத்தை நிறுவும் பணியில் இராகவையங்கார், தேவர் அவர்களுக்குப் பெருந்துணையாயிருந்தார். நான்காம் தமிழ்ச் சங்கம் என இது போற்றப்பெற்றது. சங்கத்திலிருந்து தமிழ்ப்பணி புரியத் தம் அவைப் பெரும் புலவரான இராகவையங்காரைச் சேதுபதி யவர்கள் அனுப்பி வைத்தார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தூற்பதிப்பு, ஆராய்ச்சித் துறை களின் தலைவராய் இராகவையங்கார் அவர்கள் விளங்கினார்கள். மதுரைத் தமிழ்ச் சங்கமும் செந்தமிழ்ப் பத்திரிகையும் பெரும்புகழ் பெற்று விளங்குவதற்கு இவரே காரணமாயிருந்தார். இலக்கிய ஆராய்ச்சியும் சரித்திர ஆராய்ச்சியும் இவரால் பெரிதும் ஊக்கு விக்கப்பட்டன.
அந்நாளில் பல இடங்களுக்கும் சென்று பழஞ்சுவடிகள் தேடிச் சேர்த்துச் சங்கத்துப் பாண்டியன் புத்தகசாலையில் தொகுத்து வைத்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் 1902 ஆம் ஆண்டிலே ‘செந்தமிழ்’ என்னும் திங்கள் இதழ் தொடங்கப் பெற்றபோது இப் பத்திரிகையின் முதல் இதழாசிரியராக இராகவையங்கார்.
பொறுப்பேற்றார். இப் பத்திரிகையில் ‘ஆராய்ச்சி’ என்னும் தலைப்பில் இவர்கள் தொடர்ந்து தமிழிலக்கிய இலக்கணம் முதலியன் குறித்து ஆய்வுரைகள் எழுதி வந்தார். இவருடைய ஆழ்ந்த கல்லியும் நுண்ணிய ஆராய்ச்சித் திறனும் பொருள்களை முறைப்படப் பாகுபடுத்திப் பார்த்து விளக்கும் பேராற்றலும் இவர் எழுதிய கட்டுரைகளில் புலனாகின்றன.
செந்தமிழ் வாயிலாகப் பழஞ்சுவடிகளிலிருந்து எடுத்து இவர் பதிப்பித்த நூல்களும் பலவாகும். அவையாவன: ஐந்திைைட யைம்பது. உரை, கனாநூல், வளையாபதிச் செய்யுட்கள், புலவராற்றுப்படை, இனியவை நாற்பது உரை, நேமிநாதம் உரை, திருநூற்றந்தாதி, முத்தொள்ளாயிரச் செய்யுட்கள், பன்னிருபாட்டியல், தொல்காப்பியச் செய்யுளியல் நச்சினார்க் கினியர் உரை முதலியனவாகும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றைப் பதிப்பிக்கச் சங்கத்தின் வாயிலாக இவர் எடுத்த முயற்சி முற்றுப்பெறவில்லை.
பின்னாளில் சும்பரி” – விலாசம் இராச. கோபாலையங்கார் இந் நூலை வெளியிட முன் வந்தபோது தாம்- முன்பு தொகுத்து வைத்திருந்த=குறிப்புகள் முதலியவற்றை அவருக்கு வழங்கி அந் நூல் சிறப்புற வெளிவர உதவினார். இவ்வாறு வேறு புலவர் சிலருக்கும் இவர் ஏடுகள் முதலியன தந்து உதவியுள்ளார்.
கைந்நிலைப் பிரதியை இ.வை. அனந்தராமையர் விரும்பிய போது இவர் மனமுவந்து அவருக்கு அதனை அளித்தார்: இவ்வாறே தொல்காப்பிய இளம்பூரணம் செய்யுளியல் உரைப் பிரதியையும் நலநீதப் பாட்டியல் உரையையும் இவர் யாதொரு வகைக் – கைம்மாறும் சுருதாது பேராசிரியர்’ எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களுக்குத் தந்தனர்.
பிள்ளையவர்கள் அவற்றைத் தம் பதிப்பில நனகு பயன்படுத்திக் கொண்டுள்ளார். தாம் கற்ற கல்வியைத் தம்முடன் மாய்ந்து போக விடாதபடி அறிஞர் பிறருக்கும் உதவவேண்டும். என்னும் பேரவா உடையார் இராகவையங்கார் என்பது மேற்கூறியவற்றால் தெரிய வரும்.
டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்களைப் போலவே இவரும் தம் பண்டை நூற் கருவூலங்களைத் தேடித்தொகுத்து வைப்பதில் பேரூக்கம் கொண்டிருந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு இவர் தேடியளித்த சுவடிகள் பலவாகும்.
பின்னாளில் தம்மிட மிருந்த ஏட்டுச்சுவடிகள் பலவற்றைப் பலர்க்கும் பயன்படும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக் கழக நூல் நிலையத்திற்கு இவர்கள் தந்துவிட்டமை குறிப்பிடத் தக்கது. அவர்தம் இல்லத் தில் எஞ்சியிருந்த சுவடிகளை (51) அவருடைய புதல்வர் வித்துவான் இராமானுஜையங்கார் சில திங்களுக்குமுள் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பழைய சுவடிகளைக் காகிதத்தில் பிரதி செய்து இவர் படித்ததும் உண்டு.இராமதாதபுரத்தில் உள்ள அவர் மாளிகைக்கு நான் சென்றிருந்த போது மகாவித்துவான் அவர்களால் எழுதிப் பெற்ற நீலகேசி உரையுடன் கூடிய கையெழுத்துப் பிரதியை அவர். மகனார் காட்டினார் : சமணசமயம். சார்த்த தத்துவக் கருத்துக மிகுந்து: இந்நூலையும் உரையையும் பிரதிசெய்து படித்தமையை நோக்கினால் சமயக் காழ்ப்பின்றித் தமிழ்நலம் பேணுவதொன்றே இவர்தம் நோக்கமாயிருந்தது என்பது தெரியவரும்.
கோழமன்.னர்-விக்கிரமன்; குலோத்துங்கன். இராசராசன் என்னும் மூவர் அவையிலும் கவிராட்சசன் என்னும் புகழுடைய ஒட்டக்கூத்தர் தலைமைப் புலவராய்ச் சிறந்து விளங்கினார். அதுபோலவே இராகவையங்கார் அவர்களும் – பாஸ்கர-சேதுபதி,’ முத்துராமலிங்க ராசராசேசுவர சேதுபதி சண்முக -ராசேசுவர நாகநாத சேதுபதி ஆகியோர் காலத்திலும். தொடர்ந்து சேது சமத்தான மகாவித்துவானாயிருந்தார். தந்தை; மகள்; பேரன் மூவரும் நம் மகாவித்துவானிடம் பெரும் மதிப்பு: போற்றிவந்தனர்.
‘இன்பாற் கரனா’ கிராசரா சேச்சுரச்சேய் தென்னாக நாதவர சேதுபதி மன்னரிவரி’ விறுமே லள்ள மிசையாதே வென்னாவே கூறுமே பாரி கொடை”வைத்துப் எனத் தாம் செய்த பாரிகாதைக் காவியத்தில் தம்மைப் புரந்த சேதுபதிகள். மூவரையும் நன்றியுடன் – போற்றியுள்ளமை காணலாம்.
மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் – 13ஆம் ஆண்டு விழாவில் இவர் சேதுநாடும் தமிழும்’ என்னும் ஆய்வுரை- தனிநூலாகச் சங்கத்தின் வழி வெளியிடப்பட்டுள்ளது. – இராசராச. சேதுபதி யவர்கனின் தூண்டுதலால்-‘வஞ்சிமா நகரம்’ என்னும் ஆராய்ச்சி- நூலை ஆக்கி வெளியிட்டார்.
செந்தமிழில் தாம் எழுதிவந்த சங்ககாலப் பெண்புலவர்களின் ” வரலாற்றைத் தொகுத்து நல்லிசைப் புலமை மெல்லியலார்” என்னும் பெயரில் வெனி யிட்டார். பிற்குறித்த இருநூல்களும் அந் நாளில் கல்லூரி மாணவர்களுக்குப் பாடப்புத்தகமாயும். அமைக்கப்பெற்ற சிறப்புக்குரியனவாகும்.
அவ்வப்போது பாடநூல்கள் பலவும். இவர்- ஆக்கி வெளி விட்டார். அவற்றுள் ‘புவி எழுபது; தொழிற்சிறப்பு, திருவடி மாலை, சீராமநாமப்பாட்டு என்பவை. குறிப்பிடத்தக்கன. ‘இராசராசேசுவர சேதுபதி ஒரு துறைக் கோவை” ஒரு சிறந்த படைப்பாகும்: ‘அவ்வப்போது’ இவர்பாடிய தனிப்பாடல்களும் பலவாகும்.
Language | Tamil |
No. of Pages | 148 |
PDF Size | 6.2 MB |
Category | Education |
Source/Credits | tamildigitallibrary.in |
Related PDFs
Seerapuranam Song Description PDF In Tamil
Seerapuranam Song Description PDF In Tamil
ஆத்திச்சூடி – Fireworks PDF Free Download