‘நாலடியார் பாடல்கள் விளக்கம்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Description Of Naladiyar Songs’ using the download button.
நாலடியார் பாடல்கள் விளக்கம் – Description Of Naladiyar Songs PDF Free Download

நாலடியார் பாடல்கள் விளக்கம் PDF
இல்லற வியல்
1. பொறையுடைமை
கோதை அருவிக் குளிர்வரை நல்நாட!
பேதையோ டியாதும் உரையற்க:-பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும்; ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று.
நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல் தகுதி;மற்(று) -ஓரும் புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம் சமழ்மையாக் கொண்டு விடும்.
காதலார் சொல்லும் கடும்சொல் உவந்துரைக்கும் ஏதிலார் இன்சொலின் தீதாமோ-போதெலாம் மாதர்வண் டார்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப! ஆவ தறிவார்ப் பெறின்.
அறிவ தறிந்தடங்கி, அஞ்சுவ தஞ்சி, உறுவ துலகுவப்பச் செய்து,-பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது.
வேற்றுமை இன்றிக் கலந்திருவர் நட்டக்கால் தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் ஆற்றும் துணையும் பொறுக்க; பொறானாயின் தூற்றாதே தூர விடல்.
இல்லற வியல்
1. பொறுமை உடைமை
மாலைபோன்று அருவி ஓடும் குளிர்ந்த நல்ல மலை நாடனே! அறிவில்லா மூடனுடன் ஒன்றும் பேசாதே; பேசினால், அந்த அறிவிலி மனம் சிதையப் பேசுவான். ஆதலின், நழுவி நீங்கி விடுதலே நல்லது.
நேர்மை யற்ற கீழோர் தன்மையற்ற சொற்களைச் சொன்னவிடத்து, அத்தவறைப் பொறுத்தலே தக்கது மற்றபடி பொறாவிடின், பொங்கும் கடல்சூழ் உலகம் புகழாகக் கொள்ளாது; தாழ்வாகவே கருதிவிடும்.
மலர்களிலெல்லாம் அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற வளம் மிக்க குளிர்ந்த கடல் நாடனே! நன்றாவதை அறியும் நல்லவரை நண்பராகப் பெறின், அந்த அன்புள்ள நண்பர் இடித்துரைக்கும் கடுஞ்சொல், சிரித்துப் பேசி நடிக்கும் பகைவரின் இன்சொல்லினும் தீய தாகுமோ?
அறியவேண்டியதை அறிந்து, அடங்கி, அஞ்சுவதற்கு அஞ்சி, செய்யத்தக்க நன்மையை உலகம் மகிழச் செய்து, பெற்றதைக் கொண்டு மகிழ்ந்து வாழும் மாண்புடையவர் எப்போதும் துன்பமுற்று வாழ்வதில்லை.
மாறுபாடு இன்றி இணைந்து இருவர் நட்புகொண் டிருக்கும்போது, ஒருவனிடம் தெளியாத தீயொழுக்கம் காணப்படின், மற்றவன், பொறுக்கும்வரையும் பொறுப் பானாக; பொறுக்க முடியாமற்போனால், அவனைத் தூற்றாமல் தூர விலகிவிடுவானாக.

இன்னா செயினும் இனிய ஒழிகென்று தன்னையே தான்நோவின் அல்லது-துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல்; கானக நாட! விலங்கிற்கும் விள்ளல் அரிது.
பெரியார் பெருநட்புக் கோடல், தாம்செய்த அரிய பொறுப்பஎன் றன்றோ – அரியரோ ஒல்லென் அருவி உயர்வரை நல்நாட! நல்லசெய் வார்க்குத் தமர்.
வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்(கு) அற்றம் அறிய உரையற்க; – அற்றம் மறைக்கும் துணையார்க் குரைப்பவே தம்மைத் துறக்கும் துணிவிலா தார்.
இன்பம் பயந்தாங் கிழிவு தலைவரினும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்க-இன்பம் ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட! பழியாகா வாறே தலை.
தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க; தன்னுடம்பின் களன்கெடினும் உண்ணுர்கைத் துண்ணற்க;-வான்கவிந்த வையகம் எல்லாம் பெறினும் உரையற்க பொய்யோ டிடைமிடைந்த சொல்.
Language | Tamil |
No. of Pages | 184 |
PDF Size | 6.2 MB |
Category | Education |
Source/Credits | tamildigitallibrary.in |
Related PDFs
Seerapuranam Song Description PDF In Tamil
Seerapuranam Song Description PDF In Tamil
நாலடியார் பாடல்கள் விளக்கம் – Description Of Naladiyar Songs PDF Free Download