துர்க்கை அம்மன் பாடல்கள் | Durga Amman Songs PDF In Tamil

‘துர்க்கை அம்மன் பாடல்கள்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Durga Amman Songs’ using the download button.

துர்க்கை அம்மன் பாடல்கள் – Durga Amman SongsTamil PDF Free Download

துர்க்கை அம்மன் பாடல்கள்

துர்க்கை அம்மன் பாடல்கள் PDF

தெய்வங்களுக்கு சடங்குகள்‌ நிகழ்த்தி வளமை. கண்ட தமிழ்ச்‌ சமூகத்தில்‌ நம்பிக்கையின்‌ அடிப்படை யில்‌ வழிபடும்‌ சிறு தெய்வங்கள்‌ முதன்மை பெறு கின்றன. தமிழக நாட்டுப்‌ புறங்களில்‌ மாரியம்மன்‌, காளியம்மன்போன்ற பெண்‌

தெய்வங்கள்‌ சக்தியின்‌ மறு உருவமாகக்‌ கருதுவது தமிழகக்‌ கிராமப்‌ புற மக்களின்‌ நம்பிக்கையாக இன்றும்‌ தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அத்தகைய பெண்‌ தெய்வங்களில்‌ ஸ்ரீவன துர்க்கை அம்மன்‌ என்னும்‌ பெண்‌ தெய்வம்பற்றி விழுப்புரம்‌ மாவட்டம்‌, செஞ்சி வட்டம்‌, தேவதானம்‌ பேட்டை கிராமத்தைச்‌ சேர்ந்த &.

ஜெயராம்‌ அவர்கள்‌ பாடியருளிய புகழ்ப்‌ பாடல்களும்போற்றிப்‌ பாடல்களும்‌ அமைந்ததே “ஸ்ரீவனதுர்க்கை அம்மன்‌ பாடல்கள்‌” என்னும்‌ இத்தாள்‌ சுவடிப்‌ பதிப்பாகும்‌. நூல்‌ பெரருண்ணாா ஸ்ரீவன துர்க்கை அம்மன்‌ பாடல்கள்‌ என்னும்‌ இத்தாள்‌ சுவடி செஞ்சி வட்டம்‌,

தேவதானம்பேட்டை யில்‌ உள்ள பேட்டையில்‌ உள்ள பேட்டை மலை என்றழைக்கப்‌ பெறும்‌ கரியமாலையில்‌ எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீவன துர்க்கை அம்மனின்‌ அதிதீர செயல்களையும்‌, அம்மனின்‌ அருள்‌ திறங்களையும்‌ புகழ்ப்பாடலாக கொண்டு அமைந்து காணப்‌ பெறுகிறது.

நூல்‌ மைப்பு : ஸ்ரீவன துர்க்கைஅம்மன்‌ பாடல்கள்‌ என்னும்‌ இத்தாள்‌ சுவடியில்‌ அமைந்த பாடல்கள்‌ 40 ஆகும்‌. இந்நூல்‌ முதலில்‌ விநாயகர்துதி, சரஸ்வதி துதி என்னும்‌ இருதுதி பாடல்களையும்‌ அவையடக்கப்பாடல்‌ ஒன்றையும்‌ கொண்டு தொடங்கி அம்மனின்‌ புகழ்பாடல்கள்‌ தொடர்ச்சியாக அமைந்து முற்று பெறுகிறது. இசைப்பாடல்கள்‌ :

கும்மி இன்னிசை, தாலாட்டு, திரை இசைப்பாடல்‌ மெட்டுப்பாட்டு போன்ற இசைப்‌ பாடல்களைக்‌ கொண்டு ஸ்ரீவன துர்க்கை அம்மன்‌ பாடல்கள்‌ என்னும்‌ தாள்‌ சுவடி காணப்‌ பெறுகிறது. இசைப்‌ பாடல்கள்‌ ஆசிரியரின்‌ இசையார்வத்தை மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளது. பாப்பு : ஸ்ரீவன துர்க்கைஅம்மன்‌ பாடல்கள்‌ என்னும்‌ இத்தாள்‌ சுவடி இலக்கியத்தில்‌ விருத்தம்‌,

செய்யுள்‌, சந்தம்போன்ற யாப்பில்‌ அமைந்த சந்தங்களைக்‌ கொண்டு இயற்றப்‌ பெற்றுள்ளன. இந்தப்‌ பாடல்கள்‌ ஆசிரியரின்‌ சந்த முயற்சியையும்‌ திருப்புகழ்‌ ஈடுபாட்டை யும்‌ பறைசாற்றுகின்றன. நடை : ஸ்ரீவன துர்க்கைஅம்மன்‌ பாடல்கள்‌ என்னும்‌ இந்த இலக்கியம்‌ இனிய எளிய தமிழ்ச்‌ சொற்களாலும்‌,

பேச்சு வழக்குச்‌ சொற்களாலும்‌ அமைந்து உவமை, உருவகம்‌, கற்பனை நிறைந்து பாமரரும்‌ அறியும்‌ வண்ணம்‌ அமைந்து காணப்‌ பெறுவது இதன்‌ தனிச்‌ சிறப்பாகும்‌. வடமொழிச்‌ சொற்கள்‌ பாடலின்‌ இடையே இடம்‌ பெற்றிருப்பது கி.பி.20 ஆம்‌ நூற்றாண்டிலும்‌ வடமொழி யின்‌ செல்வாக்கு இருந்து வருவதைக்‌ காட்டுகிறது. ரழைகள்‌ : எழுத்துப்பிழைகள்‌ அமைந்தும்‌,

லகர – ளகர, றகர – ரகர, வேறுபாடின்றியும்‌ மெய்‌ மயக்கம்‌ அமைந்தும்‌ ஸ்ரீவன துர்க்கைஅம்மன்‌ பாடல்கள்‌ என்னும்‌ இத்தாள்‌ சுவடி காணப்‌ பெறுகிறது. மேற்‌ காணப்‌ பெற்ற பிழைகள்‌ திருத்தம்‌ செய்ய பெற்று இப்பதிப்பு அமைகிறது. நூலாசிறிரார்‌ : “ஸ்ரீவன துர்க்கைஅம்மன்‌ பாடல்கள்‌” என்னும்‌ இத்தாள்சுவடியில்‌ அமைந்த பாடல்களை அருளிய ஆசிரியர்‌ &.

ஜெயராம்‌ என்பவராவார்‌. இவர்‌ விழுப்புரம்‌ மாவட்டம்‌ செஞ்சி வட்டத்தைச்‌ சேர்ந்த தேவதானம்‌ பேட்டை என்னும்‌ கிராமத்தைச்‌ சார்ந்தவர்‌. இவர்‌ கி.பி.20 ஆம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்து மறைந்தவர்‌ என்பதும்‌, இந்து சமயத்தைச்‌ சார்ந்தவர்‌ என்பதும்‌, ஸ்ரீவன துர்க்கைஅம்மன்‌ மீது மிகுந்த பக்தி கொண்டவர்‌ என்பதும்‌ இத்‌ தாள்‌: சுவடி மூலம்‌ பெறப்படும்‌ கருத்தாகும்‌.

கனவும்‌ – பலமையும்‌ : இந்நூல்‌ ஆசிரியர்‌ அடிப்படைக்‌ கல்வி பயிலாதவர்‌ என்பதும்‌, வனதுர்க்கை அம்மனை துன்மதி ஆண்டு சித்திரை மாதம்‌ 8 ஆம்‌ தேதி திங்கள்‌ (20.04.1981) .

அன்று கனவில்‌ கண்டு அம்மனின்‌ அருளால்‌ புலமை பெற்று சித்திரை மாதம்‌ 1௦ ந்தேதி (22.04.1981) புதன்‌ கிழமை அன்று அம்மன்‌ வரலாற்றை துர்க்கை அம்மன்‌ திருவிளையாடல்‌ என்னும்‌ நாடகமாக எழுதினார்‌ என்பதும்‌ ஸ்ரீவன துர்க்கைஅம்மன்‌ பாடல்கள்‌ என்னும்‌ தாள்‌ சுவடியில்‌ காணப்‌ பெறும்‌ அகச்‌ சான்றுகளாகும்‌.

படைப்புகள்‌ : இந்‌ நூலாசிரியர்‌ ஸ்ரீவன துர்க்கைஅம்மன்‌ வரலாற்றை புகழ்‌ பாடல்களாகவும்‌ போற்றிப்‌ பாடல்களாகவும்‌ அன்றி துர்க்கை அம்மன்‌ திருவிளை யாடல்‌ (அ) துருவ அரக்கன்‌ சண்டை என்னும்‌ நாடகமாகவும்‌ இயற்றியுள்ளார்‌.

இதனைத்‌ தொடர்ந்து கமலாவதியாள்‌ கார்மேகன்‌ மோச்சம்‌ என்னும்‌ சிவனேஸ்வரி திருக்கல்யாணம்‌, நாரதர்‌ கலகம்‌ என்னும்‌ சக்தி சதுரமுகாசூரன்‌ சண்டை என்பன போன்ற பிற நாடகங்களையும்‌ இயற்றியளித்துள்ளார்‌ என்பதை நாடக நூல்கள்‌ தற்போது கிடைக்கப்‌ பெறாமை நமது தவக்குறையாகும்‌.

தாள்‌ சுவடியில்‌ வரும்‌ குறிப்புகள்‌ மெய்ப்பிக்கின்றன. பதிப்பும்‌ தாள்‌ ௬வடியும்‌ : இரவ்ன ‘துர்க்கைஅம்மன்‌ பாடல்கள்‌ என்னும்‌ “இத்தாள்‌ சுவடி செஞ்சி வட்டம்‌ தேவதானம்பேட்டை யைச்‌ சார்ந்த ஆசிரியர்‌ &.

ஜெயராம்‌ அவர்கள்‌ எழுதிய கையெழுத்துப்‌ பிரிதியான தாள்‌ சுவடியை முதன்மை யாகக்‌ கொண்டு பதிப்பிக்கப்பெறுகிறது. இத்தாள்‌ சுவடியின்‌ மூலம்‌ ஆசிரியர்‌ க. ஜெயராம்‌ அவர்களின்‌ மகனார்‌ ஜெ. கருணாகரன்‌ அவர்களிடம்‌ தற்போது உள்ளது.

Language Tamil
No. of Pages74
PDF Size18.9 MB
CategoryEducation
Source/Creditstamildigitallibrary.in

Related PDFs

Fireworks PDF In Tamil

Description Of Naladiyar Songs PDF In Tamil

Tamil Vidu Dutu PDF In Tamil

Source Mantras PDF In Tamil

History Of Tamil Nadu PDF In Tamil

துர்க்கை அம்மன் பாடல்கள் – Durga Amman SongsTamil PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!