மூலிகைகள் அதன் பயன்கள் | Herbs And Their Uses PDF In Tamil

‘மூலிகைகள் அதன் பயன்கள்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Herbs And Their Uses’ using the download button.

மூலிகைகள் அதன் பயன்கள்- Herbs And Their UsesTamil PDF Free Download

மூலிகைகள் அதன் பயன்கள்

மூலிகைகள் PDF

முனைவா்‌ ம. செகதீசன்‌ அவர்கள்‌ எழுதிய “தமிழ்‌ நாட்டு மூலிகைகள்‌: அறிவியல்‌ ஆய்வுகள்‌” எனும்‌ இந்நூல்‌ பெரிதும்‌ பயனுடையதாகும்‌. தமிழ்ப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இப்பேராசிரியர்‌ மூலிகைப்‌ பண்ணை ஒன்றினைத்‌ தொடங்கி, அரிய பல மூலிகைகளை அத்தோட்டத்தில்‌ பயிரிடப்‌ மபேரார்வம்‌ காட்டி வருகிறார்‌.

இச்சிறிய நூலின்கண்‌ முப்பத்தி எட்டு மூலிகைகளை இனங்கண்டு. அவற்றின்‌ வேறு பெயர்களைக்‌ குறிப்பிட்டும்‌ அம்மூலிகைகளுக்கு உரிய தாவரப்‌ பெயரினைச்‌ சுட்டியும்‌, அம்மூலிகைகள்‌ எந்தக்‌ குடும்பத்தைச்‌ சார்ந்தது என்பதைக்‌ குறிப்பிட்டும்‌ இருப்பது மேற்கொண்டும்‌ அறிவியல்‌ ஆய்விற்கு வழிவகுக்கும்‌ செல்நெறியாகும்‌.

மேலும்‌, இந்நூலாசிரியர்‌ மூலிகைகளின்‌ அமைப்பினை விவரிப்பது அவைகளை இனங்கண்டு கொள்ளப்‌ பெரிதும்‌ உதவும்‌. இந்நூலாசிரியர்‌ குறிப்பிட்ட மூலிகைகள்‌ இயற்கையில்‌ வளரும்‌ இடங்களைச்‌ சிறப்பாகச்‌ சுட்டி இருப்பது பபோற்றத்தக்கதாகும்‌.

அத்தகைய மூலிகைகளில்‌ எந்த எந்தப்‌ பகுதிகளில்‌ மருத்துவக்‌ குணம்‌ நிரம்பிக்‌ காணப்படுகின்றன என வரையறுத்துக்‌ கூறுவது, மூலிகை மருத்துவத்திற்குப்‌ பயனுள்ள செய்தி ஆகும்‌.

மீமேற்கூறிய செய்திகளை எழுதி இருப்பது மட்டுமன்றி இம்மூவிகையை எந்தெந்த தோய்களுக்கு எப்படிப்‌ பயன்படுத்தலாம்‌ என்று விவரித்திருப்பது இந்நாலாசிரியரின்‌ முயற்சிக்கு எடுத்துக்காட்டாகத்‌ திகழ்கிறது. இந்நாலின்‌ இறுதியில்‌ அகர வரிசையில்‌ மூலிகை களின்‌ தாவரப்‌ பெயர்‌ அகராதி ஒன்று தரப்பட்டுள்ளது. இச்சிறப்பினால்‌ இந்நாலின்‌ பயன்‌ பல மடங்காக உயர்கிறது.

முனைவர்‌ ம. செசகதீசன்‌ அவர்கள்‌ தாவரப்‌ பெயர்‌ களின்‌ அகராதியில்‌ குறிப்பிட்டுள்ள மூலிகைகளை அவர்‌ காத்து வளர்த்து வரும்‌ மூலிகைப்‌ பண்ணையில்‌ பமிரிட்டு வளர்த்துச்‌ சித்த மருத்துவத்தில்‌ ஈடுபடும்‌ ஆர்வலர்களுக்கும்‌, ஆராய்ச்சியாளர்களுக்கும்‌, காட்ட இயலுமானால்‌ இவ்வாசிரியர்‌ மேற்கொண்ட ஆராய்ச்சியை நடைமுறைப படுத்துவதில்‌ முன்னணியில்‌ நிற்கிறார்‌ என்பது தெற்றென விளங்கும்‌: இந்நூலின்‌ பயனும்‌ இத்தகைய’ முயற்சியால்‌ பல மடங்காகப்‌ பெருகும்‌.

தமிழ்‌ நாட்டின்கண்‌ மூலிகைகளைச்‌ சேர்த்து வளர்க்கும்‌ பெருமை இந்நூலாசிரியருக்கும்‌, தமிழ்ப்பல்கலைக்‌ கழகத்திற்கும்‌ வாய்க்கும்‌ அல்லவா! பயனுள்ள இந்தச்‌ செயலில்‌ ஈடுபட்டு வெற்றி பெற இவ்‌ அணிந்துரை மூலம்‌ வாழ்த்துவதில்‌ பெருமிதம்‌ கொள்கிறேன்‌.

“தமிழ்நாட்டு மூலிகைகள்‌ – அறிவியல்‌ ஆய்வுகள்‌, தொகுதி 7 என்ற ஆய்வேடு தமிழ்‌ நாட்டில்‌ பயன்படுத்தப்படும்‌ மூலிகைகளில்‌ இதுவரை நடந்த அறிவியல்‌ ஆய்வுகளின்‌ நொகுப்பின்‌ ஒரு சிறுபகுதியாகும்‌.

தமிழ்நாட்டு மூலிகைகள்‌ என்ற சொல்தொடரா்‌ குமிழ்நாட்டில்‌ விளையும்‌ மூலிகைகள்‌ என்ற பொருள்‌ அல்லாமல்‌ சித்தமருத்துவ நூல்களில்‌ கூறப்பட்டுள்ள மூலிகைகள்‌ மற்றும்‌ தமிழ்நாட்டில்‌ மருத்துவப்‌ பயன்பாட்டில்‌ உள்ள மூலிகைகள்‌ என்ற பொருளில்‌ இங்கே கையாளப்பட்டுள்ளது.

மூலிகைகளின்‌ கமிழ்ப்‌ ெயர்களுக்குரிய தாவரப்‌ (/பயர்களைத்‌ பதாகுத்த “மூலிகை அகராதி’யும்‌ இவ்‌ ஆய்வேட்டில்‌ அடங்கும்‌. ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு தமிழ்‌ மூலிகைப்‌ பெயர்கள்‌ சித்த மருத்துவ நூல்களில்‌ கூறப்பட்டுள்ளன.

இப்பெயர்கள்‌ அனைத்தும்‌ ஏறக்குறைய ஆயிரத்துநூறு மூலிகை இனங்களைக்‌ குறிப்பனவாகும்‌. இவ்‌ ஆய்வேட்டில்‌, 38 மூலிகைகளின்‌ தாவரப்‌ பெயர்கள்‌, வழக்குப்‌ பெயர்கள்‌, ஆங்கிலப்‌ பெயர்கள்‌ மற்றும்‌ அதன்‌ அமைப்பு, மூக்கும்‌ காலம்‌, பயன்படும்‌ அதன்‌ பாகங்கள்‌, அதன்‌ மருத்துவப்‌ பயன்கள்‌ ஆகியவையும்‌, அதன்‌ மூவமருந்தியல்‌, வேதியியல்‌,

மருந்தியல்‌ மற்றும்‌ பண்டுவ ஆய்வுகள்‌ போன்ற செய்திகளும்‌ (1982 வரை) பல அறிவியல்‌ இதழ்கள்‌, நூல்கள்‌ இவற்றிலிருந்து தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. சித்தமருத்துவம்‌ மற்றும்‌ பிற இந்திய மருத்துவ முறைகளில்‌ கூறப்பீட்டுள்ள மூலிகைகளின்‌ மருத்துவக்‌ குணங்கள்‌ பொதுவாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

எனது ஆய்வுக்கு ஊக்கமளித்து இந்‌.நூலுக்குச்‌ சிறந்த அணிந்துரை வழங்கிய மாண்புநிறை துணைவேந்தர்‌ முனைவர்‌ கதிர்‌.மகாதேவன்‌ அவர்களுக்கும்‌ ஆக்கமளித்த புலத்தலைவர்‌ மற்றும்‌ துறைத்தலைவர்‌ அவர்களுக்கும்‌, மற்றும்‌ துணை நின்ற நண்பர்கள்‌ அனைவருக்கும்‌ என்‌ மனமார்ந்த நன்றியைத்‌ தெரிவிக்கக்‌ கடப்பாடுடையேன்‌.

Language Tamil
No. of Pages121
PDF Size5.5 MB
CategoryEducation
Source/Creditstamildigitallibrary.in

Related PDFs

Description Of Naladiyar Songs PDF In Tamil

Tamil Vidu Dutu PDF In Tamil

Source Mantras PDF In Tamil

History Of Tamil Nadu PDF In Tamil

மூலிகைகள் அதன் பயன்கள் – Herbs And Their UsesTamil PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!