சீறாப்புராணம் பாடல் விளக்கம் | Seerapuranam Song Description PDF In Tamil

‘சீறாப்புராணம் பாடல் விளக்கம்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘சீறாப்புராணம் பாடல் விளக்கம்’ using the download button.

சீறாப்புராணம் பாடல் விளக்கம்- Seerapuranam Song Description PDF Free Download

சீறாப்புராணம் பாடல் விளக்கம்

சீறாப்புராணம் பாடல் விளக்கம் PDF

உமறுப்புலவரின்‌ காலம்‌

உமறுப்‌ புலவரின்‌ சிறப்பை அறிந்து கொள்ள அவர்‌ பிறந்து வாழ்ந்த காலத்தை அறிவது அவசியமாகும்‌. உமறுப்புலவரின்‌ மரபில்‌ வந்த புலவர்‌ ஒருவர்‌ இயற்றிய பாடல்‌ இவர்‌ உறிஜ்ரி 1052 ஷஅபான்‌ மாதம்‌ பிறை 9-இல்‌ பிறந்தார்‌ என்று தெளிவாகக்‌ குறிப்பிடுகிறது. இது தி.பி.

1648 அக்டோபர்‌ மாதம்‌ 25-ஆம்‌ தேதிக்கு நிகரானது என்று டாக்டர்‌ ம.மு. உவைஸ்‌ கணித்துள்ளார்‌. இவர்‌ இறந்தது உறிஜ்ரி 1115 (1703) ஆம்‌ ஆண்டு. இது கொண்டு அவரின்‌ காலத்தை உறிஜ்ரி 1052-1715 எனக்கொள்ளலாம்‌. இது கி.பி. 1642-1703க்குச்‌ சமமாகும்‌. ஆதலின்‌ உமறுப்புலவரின்‌ காலம்‌ இ.பி.

17-ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்‌ பகுதி எனலாம்‌. இதற்கு இவரின்‌ ஆசிரியர்‌, சமகால வள்ளல்‌, மார்க்கமேதை ஆகியோர்‌ பற்றிய காலக்குறிப்புகளும்‌ அரண்‌ செய்யக்‌ காணலாம்‌. வள்ளல்‌ சீதக்காதி உமறுப்புலவரைச்‌ சீறாப்புராணம்‌ இயற்றும்படி கேட்டு ஆதரித்து வந்தார்‌ என்பதில்‌ வரலாற்று ஆசிரியர்‌ அனைவரும்‌ உடன்‌ படுகின்றனர்‌.

இவ்வள்ளல்‌ வாழ்ந்த காலம்‌ கி.பி. 1650-க்குச்‌ சற்று முந்தியதும்‌ 1713-க்கு சற்று பிந்தியதும்‌ ஆகும்‌ என்று கேப்டன்‌ அமீரலி நிறுவுகிறார்‌. உமறுப்புலவர்‌ மார்க்கமேதை செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம்‌ காப்பியம்‌ இயற்றக்‌ கருப்பொருள்‌ கேட்டார்‌ என்பர்‌.

இம்மார்க்க மேதை பற்றி உமறுப்புலவர்‌ ஒருபாடலும்‌ இயற்றிக்‌ காப்பியத்தில்‌ சேர்த்துள்ளார்‌. இவரின்‌ காலத்தை இவரின்‌ மாணாக்கர்‌ முகம்மது தீபியின்‌ கவிகொண்டு இ.பி. 17-ஆம்‌ நூற்றாண்டு எனக்‌ கணிப்பர்‌. உமறுப்புலவரின்‌ ஆசிரியர்‌ கடிகைமுத்துப்‌ புலவரும்‌ இ.பி.

17-ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியைச்‌ சேர்ந்தவர்‌. ஆதலின்‌ உமறுப்புலவரின்‌ காலம்‌ தி.பி. 17-ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதி எனக்கொள்ளலாம்‌. இக்காலப்பகுதியில்‌ தமிழ்‌ மொழி பொலிவு குன்றியிருந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில்‌ புகுந்து நிலையான இடத்தைப்‌ பெற்றிருந்த வட மொழியுடன்‌ தெலுங்கும்‌ மராத்தியும்‌ உருதும்‌ காலூன்றிக்‌ கொண்டிருந்த காலம்‌.

செஞ்சியில்‌ மராட்டியர்‌ ஆட்சி; தஞ்சையிலும்‌ மதுரையிலும்‌ நாயக்கர்‌ ஆட்சிகள்‌. தென்பாண்டிச்‌ சீமையெங்கும்‌ தெலுங்கு நாயக்கப்‌ பாளையக்காரர்கள்‌. போதாக்குறைக்குப்‌ பறங்கியர்கள்‌ தமிழக ஆக்கத்திற்குப்‌ போட்டியிட்டுக்‌ கொண்டிருந்தார்கள்‌.

பொருள்‌ தரும்‌ குறுநில மன்னர்கள்‌ மீது காமச்சுவை மலிந்த கோவைகளும்‌ உலாக்களும்‌ தூதுகளும்‌ புலவர்கள்‌ பாடிக்கொண்டிருந்தனர்‌. தமிழன்னை புதியதொரு பேரிலக்கியம்‌ தோன்றாதா என்று எதிர்ப்பார்த்துக்‌ கொண்டிருந்தாள்‌. இச்சூழலில்தான்‌ உமறுப்புலவர்‌ தோன்றிச்‌ செந்தமிழ்க்‌ காப்பியம்‌ இயற்றத்‌ தொடங்கினார்‌.

வாழ்க்கை வரலாறு

சமயம்‌ வளர்த்த தமிழ்‌ உயர்‌ தனிச்செம்மொழியாகிய தமிழ்‌ மொழிக்குச்‌ சிறப்புகள்‌ பல உண்டு. தொன்மையானது; சொல்வளம்‌ மிக்கது; இனிமையானது; எளிமையானது; எழுத்துவழக்கும்‌ பேச்சுவழக்கும்‌ கொண்டது; இலக்கிய வளம்‌ சான்றது; இலக்கண நலம்‌ பொருந்தியது.

இச்சிறப்‌ புகள்‌ மட்டுமல்லாமல்‌ இங்குள்ள பெருஞ்சமயங்கள்‌ அனைத்தும்‌ வளர்க்கும்‌ பெருமையும்‌ கொண்டது. எனவேதான்‌ ”சமயந்தோறும்‌ நின்ற தையள்‌” என்று போற்றப்படுகிறது.

தலைகிறந்த முஸ்லிம்‌ புலவர்‌ சைவரும்‌ வைணவரும்‌ பெளத்தரும்‌ கிறிஸ்தவரும்‌ தமிழ்‌ மொழிக்குத்‌ தொண்டாற்றியது போல்‌ இஸ்லாமியரும்‌ இன்பத்‌ தமிழுக்கு அரிய தொண்டாற்றி உள்ளனர்‌. 8 இனிய தமிழ்க்‌ காப்பியங்கள்‌ இயற்றியதுடன்‌ எராயிரத்துக்கும்‌ மேற்பட்ட சிற்றிலக்கியங்களும்‌ படைத்துள்ளனர்‌.

இவற்றில்‌ தமிழில்‌ உள்ள பா வடிவங்கள்‌, இலக்கிய வடிவங்கள்‌ அவைத்தும்‌ இடம்‌ பெற்‌ றுள்ளன. இவை மட்டுமல்லாமல்‌ கிஸ்ஸா, நாமா, படைப்பபோர்‌, மசாலா, முனாஜாத்‌, நொண்டி நாடகம்‌ முதலிய புதுவகை இலக்‌ இயங்களையும்‌ வழங்கித்‌ தமிழ்‌ மொழிக்கு வலிவும்‌ பொலிவும்‌ சேர்த்துள்ளனர்‌.

இவ்வாறு இனிய தமிழ்‌ இலக்கியங்களைப்‌ படைத்‌ துள்ள முஸ்லிம்‌ புலவருள்‌ உமறுப்புலவர்‌ தலைசிறந்தவர்‌.

அகச்சான்று இல்லை இருத்தக்க தேவர்‌, சேக்கிழார்‌, கம்பர்‌ போன்று உமறுப்புலவர்‌ இலக்கியவளம்‌ கொண்ட காப்பியம்‌ இயற்றியுள்ள பெருங்‌ கவிஞராவார்‌. தமிழ்நாட்டுப்‌ புகழ்‌ மிக்க கவிஞர்களுக்குத்‌ தெளிவான வாழ்க்கை வரலாறு இல்லை.

ஆனால்‌ வழி வழியாக வழங்கி வரும்‌ செவி வழிச்‌ செய்திகளோ மிகுந்துள்ளன. உமறுப்புலவரும்‌ இதற்கு விலக்கல்லர்‌. இப்புலவர்‌ பெருந்தகையின்‌ வாழ்க்கை வரலாறு தெளிவாக வரையப்பட்டிலது. இவர்‌ படைத்தனவாகக்‌ கூறப்படும்‌ நூல்களில்‌ இவரைப்பற்றிய தெளிவான செய்திகள்‌ இல்லை.

பெரும்பாலும்‌ பாயிரம்‌ அல்லது கடவுள்‌ வாழ்த்துப்பாடல்‌ பகுதியில்‌ புலவர்கள்‌ தம்‌ தந்த, ஆதரித்த வள்ளல்‌, நூலுக்குக்‌ கருத்துரை வழங்கிய ஆசிரியர்‌, முதல்‌ நூல்‌, தாம்‌ இயற்றிய நூலின்‌ பெயர்‌, இயற்றிய காலம்‌, அரங்கேற்றிய காலம்‌, அவையடக்கம்‌ முதலியவற்றுடன்‌ தம்‌ பெயரையும்‌ குறிப்பிட்டிருப்பர்‌.

காப்பிய முடிவில்‌ முத்திரைப்‌ பாடலும்‌ வாழ்த்துப்பாடலும்‌ இடம்‌ பெற்றிருக்கும்‌. இவற்றிலும்‌ அசிரியரின்‌ வரலாற்றுக்குறிப்புகள்‌ அடங்கும்‌. ஆனால்‌ சிந்தைக்‌ கினிய €ீறாவிலோ இவ்வகை வரலாற்றுச்‌ செய்திகள்‌ காணப்‌ படவில்லை.

இவர்‌ இயற்றியனவாகக்‌ கூறப்படும்‌ சீதக்காதி திருமண வாழ்த்து, முது மொழிமாலை ஆகிய இலக்கியங்களிலும்‌ இவரின்‌ வாழக்கை வரலாற்றுக்‌ குறிப்புகள்‌ காணப்படவில்லை. அவர்‌ காலத்துப்‌ புலவர்களோ, அநிஞர்களோ இவரின்‌ வாழ்க்கை வரலாற்றைப்‌ பற்றிய செய்திகளைத்‌ தநீதாரல்லர்‌.

ஆனால்‌ இவர்‌ காலத்திற்கு ஒரிரு நூற்றாண்டுகளுக்குப்‌ பின்‌ இவரைப்பற்றி வழிவழியாக வழங்கிவரும்‌ செவிவழிச்‌ செய்திகள்‌ பல தோன்றின. செவிவழிச்‌ செய்திகள்‌ சறாப்புராணத்தைச்‌ சரிபார்த்து முதன்‌ முதலில்‌ பதிப்பித்த செய்கப்துல்காதிர்‌ நயினார்‌ லெப்பை ஆலிம்‌ புலவர்‌ சீறாப்புராணம்‌ பதிப்பித்த வரலாற்றை விளக்கமாகக்‌ கூறுகிறாரே தவிர செந்தமிழ்ச்‌ சீறாவை இயற்றிய உமறுப்புலவரின்‌ வரலாறு பற்றி விளக்கமாகக்‌ கூறவில்லை.

பல இஸ்லாமிய நூல்களைப்‌ பதிப்பித்துப்‌ புதுவடிவம்‌ தந்துள்ள கண்ணகுமது மக்தூம்‌ முகம்மதுப்‌ புலவர்‌ தாம்‌ மூன்றா வதாகப்‌ பதிப்பித்துள்ள சறாப்புராணத்தில்‌ “உமறுப்புலவர்‌ பூர்வீகச்‌ சரித்திரச்‌ சுருக்கம்‌”, “சீறாப்புராணம்‌ செய்யப்பட்ட சரித்திரச்‌ சுருக்கம்‌” என்னும்‌ இருதலைப்புகளில்‌ உமறுப்புலவரின்‌ வாழ்க்கை வரலாற்றையும்‌ ஈீறாப்புராண இலக்கிய வரலாற்றையும்‌ தந்துள்ளார்‌.

பின்னர்‌ வந்த இஸ்லாமிய நூலாசிரியர்கள்‌ பெரும்பாலும்‌ இவற்றைச்‌ சுருக்கியும்‌ பெருக்கியும்‌ சிறிது மாற்றியும்‌ கூறிவரலாயினர்‌. இவற்றுள்‌ ஒன்று வருமாறு: நாயகம்‌ அவர்களின்‌ காலத்தில்‌ வாழ்ந்து அவர்களின்‌ வாழ்த்துப்‌ பெற்ற கஇிஜா-சகுது தம்பதியரின்‌ வழித்தோன்றல்‌ செய்கு பரிதத்தா என்பவர்‌.

இவர்‌ கேரளாவிற்கு வந்து நறுமணப்பொருள்‌ வாணிகம்‌ செய்து வந்தார்‌. இவரின்‌ வழி வந்த செய்கு முகம்மது அலியார்‌ எட்டைய புரத்தில்‌ மாப்பிள்ளை நயினார்‌ முகம்மது பிள்ளை என்பவருக்கு உறிஜ்ரி 1052 இல்‌ உமறுப்புலவர்‌ பிறந்தார்‌ என்று ஒரு பழம்பாடல்‌ கூறுகிறது, மாப்பிள்ளை, நயினார்‌, பிள்ளை என்றபவற்றைச்‌ சிறப்புப்பெயர்களாகக்‌ கொண்டால்‌ உமறுப்‌ புலவரின்‌ தந்தையின்‌ பெயர்‌ செய்கு முகம்மது ஆலிம்‌ எனக்‌ கொள்ளலாம்‌, ஆர்ர சிறப்பு விகுதி பெற்றுச்‌ செய்கு முகம்மது அலியார்‌ என்றாகி அது செய்கு முதலியார்‌ என்று மருவிற்று என்பர்‌.

எட்டையாபுரத்திற்கு அருகில்‌ உள்ள நாகலாபுரத்தில்‌ குடியேறி நறுமணப்பொருள்‌ உற்பத்தி செய்து குறுநில மன்னர்களுக்கு விற்று வந்தார்‌.

இவரின்‌ சிறந்த நறுமணப்பொருளை விரும்பி வாங்கிய எட்டையாபுரம்‌ மன்னர்‌ வேங்கடேச பூபதி கல்வியிலும்‌ மெய்ஞானத்திலும்‌ ஒழுக்கத்திலும்‌ உயர்ந்து விளங்கிய செய்குமுகம்மதலியாரை எட்டையாபுரத்தில்‌ தங்கும்படிச்‌ செய்தார்‌.

அறிவுச்‌ சான்ற இவ்வத்தர்‌ வணிகருக்கு அரசவையில்‌ பெரும்‌ மதிப்பிருந்தது. அவைக்களப்புலவர்‌ செந்தமிழ்ச்‌ செல்வர்‌ கடிகை முத்துப்புலவரின்‌ நட்பும்‌ இடைத்தது.

இக்காலத்தில்‌ செய்கு முகம்மதலியாருக்கு உமறுபிறந்தார்‌. விளையும்‌ பயிர்‌ முளையிலே என்னும்‌ பழமொழிக்‌ கேற்ப உமறுப்புலவர்‌ பின்னால்‌ தமிழ்மேதையாகத்‌ திகழ்வதற்குரிய அறிகுறிகள்‌ காணப்பட்டன. அறிவுக்‌ கூர்மையும்‌ எதனையும்‌ துருவி ஆராயும்‌ பார்வையும்‌ கொண்ட கருவில்‌ திருவுடைய உமறைக்‌ கண்ட அவைக்களபுலவர்‌ அவருக்குப்‌ பாடம்‌ சொல்லித்தர விழைந்து கேட்டார்‌.

செய்கு முகம்மதலியாரும்‌ இசைவளிக்க இளைஞர்‌ உமறு தமிழ்மேதை கடிகை முத்துப்புலவரிடம்‌ தமிழ்ப்‌ பாடங்கேட்டு வந்தார்‌. கற்பன கற்று, கேட்பன கேட்டுப்‌ புலமையிற்‌ இறந்து விளங்கினார்‌. வாலை வாருதியால்‌ வந்த சிறப்பு இக்காலகட்டத்தில்‌ தான்‌ வாலை வாரு என்னும்‌ வடபுலப்புலவர்‌ எட்டையாபுரம்‌ வந்தார்‌. பன்மொழிப்‌ புலமையுடன்‌ மந்திரதந்திரங்களில்‌ வல்லமையும்‌ பெற்றவர்‌.

பல அரசவைகளுக்குச்‌ சென்று, அங்கிருந்த புலவர்களை வாதுக்கிழுத்து, வென்று ஆணவங்கொண்டவர்‌. அவர்‌ ஏட்டப்பர்‌ அவைக்கும்‌ வந்து அவைக்களப்புலவரை வாதுக்கிழுத்தார்‌. மன்னரும்‌ வாதுக்கு நாள்‌ குறித்து அவைக்களப்‌ புலவர்‌ கடிகை முத்துப்புலவர்‌ வந்திடுவார்‌ என்று அறிவித்தார்‌.

ஆனால்‌ அவைக்களப்‌ புலவர்‌ மந்திர தந்திரங்களில்‌ வல்லவரான வாலைவாருநஇியுடன்‌ வாது செய்ய விரும்பவில்லை. காய்ச்சலால்‌ உடல்‌ நலமும்‌ குன்றியிருந்தார்‌. வாதுக்குரிய நாளும்‌ வந்தது. மன்னரும்‌ பெருமக்களும்‌ திரண்டனர்‌. வாலைவாருதியும்‌ வந்தார்‌. ஆனால்‌ அவைக்களப்புலவர்‌ வரவில்லை.

நோயுற்ற கடிகை முத்துப்புலவர்‌ தயங்கினார்‌. இதனையறிந்த மாணவர்‌ உமறு ஆசிரியரிடம்‌ உங்கள்‌ சார்பாக நான்‌ சென்று இறையருளால்‌ வென்றுவருகிறேன்‌ என்றார்‌. உமறுவின்‌ புலமைத்‌ துடிப்பையும்‌ அருள்‌ நஇெறத்தையும்‌ அறிந்த அவைக்களப்புலவர்‌ தம்‌ மாணவரை வாழ்த்தித்‌ தமதுவாழ்க்கை வரலாறு 7 அணிமணிகளை அணிவித்து அனுப்பினார்‌.

அரசர்‌ அனுப்பிய பல்லக்கில்‌ ”ஏறிச்சென்று உடல்‌ நலக்குறைவால்‌ என்‌ ஆசிரியர்‌ வரவில்லை. அவர்‌ சார்பில்‌ வாதிட நான்‌ வந்துள்ளேன்‌” என்றார்‌. அரசரின்‌ ஆணைப்படி வாது தொடங்கியது; பெரும்‌ புலவர்களை யெல்லாம்‌ வென்று ஆணவம்‌ கொண்ட வாலைவாருதி தம்‌ கடகத்தைச்‌ சுழற்றினார்‌.

‘வாலைவாருதி யென்றறியாயோ பிள்ளாய்‌!” என்ற ஒலி எழுந்தது. இறையருளில்‌ அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட உமறு எழுத்தாணியைத்‌ தரையில்‌ எறிந்தார்‌, அது சமரதுர கததுங்க மனருஞ்ச பா சென்று சரிசமா சனமீதிலே அமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லும்‌ அமுதகவி ராஜனானே இமிரபகை வரைவெண்ற பருதியெனு மெம தெட்டத்‌ தீரனணி வாயில்வித்வான்‌ உமறுகுமு நிடிலண்ட முகடும்ப டீரென்னும்‌ உள்ளச்சம்‌ வையும்பிள்ளாய்‌ என்று முழங்கியது.

உமறுவின்‌ அருட்திறத்தையும்‌ கவிதையாற்‌ றலையும்‌ உள்ள உறுதியையும்‌ உணர்ந்த வாலைவாருதி அஞ்சித்‌ தோல்வியை ஒப்புக்‌ கொண்டு தான்‌ பிறரிடம்‌ பெற்றுவந்த பரிசு களையும்‌ பொருள்களையும்‌ வழங்கினார்‌. உமறுவின்‌ இறங்கண்டு மஇிழ்ந்த எட்டையாபுர மன்னரும்‌ பரிசுகள்‌ வழங்கிச்‌ சிறப்பித்தார்‌.

கடிகை முத்துப்புலவரின்‌ விருப்பப்படி மானங்காத்த உமறை அவைக்களப்புலவராக நியமித்து மகிழ்ந்தார்‌. காப்பியக்‌ கவிஞரானார்‌ இச்‌ செய்தி தமிழகம்‌ எங்கும்‌ பரவியது. எட்டையப்பரின்‌ அவைக்கு வந்த வள்ளல்‌ தேக்காதி (செய்கு அப்துல்‌ காதிர்‌) புலவரின்‌ புலமைச்‌ சிறப்பைக்‌ கண்டு மகிழ்ந்து போற்றித்‌ தம்‌ ஊருக்கு வரும்‌ படி அழைத்துத்‌ தம்‌ நெடுநாள்‌ கனவாகிய நபிகள்‌ நாயகம்‌ அவர்களின்‌ வாழ்க்கை வரலாற்றை வண்ணத்‌ தமிழ்க்‌ காப்பியமாக வடித்துத்‌ தரும்படிக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌. கரும்பு இன்னக்‌ கூலியா?

Author
Language Tamil
No. of Pages142
PDF Size58.8 MB
CategoryEducation
Source/Creditstamildigitallibrary.in

Related PDFs

Andal Thiruppavai PDF In Tamil

சீறாப்புராணம் பாடல் விளக்கம் – Seerapuranam Song Dscription PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!