‘தமிழ் மந்திரங்கள்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Tamil Mantras PDF’ using the download button.
தமிழ் மந்திரங்கள் -Tamil Mantras PDF Free Download

தமிழ் மந்திரங்கள் PDF
தமிழ் மந்திரம் உண்டா?
நம் இந்தியா தேசத்து மக்களுக்கு ஒரு தவமுள எண்ணம் இருந்து வருகிறது. அதாவது மந்திரம் என்பது ஒரு குறிப் பிட்ட மொழியில் அமைந்ததுதான் என்பதும், அதுவும் அம் மந்திரம் வட மொழியில்தான் உண்டு என்பதும் ஆகும். இவ் வெண்ணம் தவறான எண்ணம். மந்திரத்தின் இலக்கணம் கூறவந்த தொல்காப்பியர்,
நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப
என்றனர். இத் தொல்காப்பியம் தமிழர்களுடைய மிக மிகத் தொன்மை வாய்த்த நூல். கிறித்துப் பிறப்பதற்கு முன் பல்லாயிர ஆண்டுகட்கு முன்தோன்றிய நூல். அகத்திய முனிவரது ‘மாணவரான தொல்காப்பியர் செய்தது தொல் காப்பியம் ஆதலின், அதன் அதள் தொன்மையைக் கூறவும் வேண்டுமா?
இதன் காலத்தை அறிய அவாவுவோர், வான் எழுதியுள்ள ‘தமிழ் நூல் வரலாறு’ என்னும் நூலில் காண்
பாராசு மேலே காட்டிய நற்பாவின் பொருள். எல்லாப் பண்பு களும் நிறைந்து மொழியவல்ல பெருமக்கள். ஆணையிட்டுக் கூறிய வாய்மொழிகள் யாவும் மந்திரம் ஆகும் என்பதாம் இந் நூற்பாவில் இன்ன மொழியில்தான் மந்திரம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடாமையினை உணரவும்.
ஆனால், சொல்பவர் இன்னராய் இருக்கவேண்டும் என்னும் குறிப்பு மட்டும் இருப்பதை நோக்கவும். அதாவது, மந்திரம் கூறுபவர் நிறைமொழி மாந்தராகவும், ஆணையில் கூறுபவராகவும் மட்டும் இருக்கவேண்டும் என்பது புவளுகிறது. இக் கருத்தை நன்கு வற்புறுத்துவார் போன்று, திருவள்ளுாவரும், *நிறைமொழி மாந்தர் பெருமை விலத்து மறைமொழி காட்டி விடும்’
என்றனர்.
இதனால், எம்மொழியிலேனும் மறைமொழியும் மந்திர மொழியும் இருக்கலாம் அன்றே? என்பது புலப்படுகிறது தொல்காப்பியர் பொதுப்பட மந்திரத்திற்கு இலக்கணம் கூறினாரேனும், சிறப்பாகத் தமிழ் மந்திரத்திற்கே இவக்கணம் கூறினர் என்பது தெளிவாகிறது.
தமிழில் மறைநூல்களும் மந்திரங்களும் உண்டு என்பதை மேலும் வெளிப்பட உரைக்க எண்ணிய தொல்காப்பியர், “பாட்டுரை நூலே வாய்மொழி” என்றும், “மறைமொழி கிளந்த மந்திரத்தான” என்றும் குறிப்பிடுதல் காண்க.
ழ்நிர மொழிகட்கு ஒரு தனி ஆற்றல் உண்டு. அம் மத்திர மொழிகள் ஆக்கவும் அழிக்கவும் செய்யும். இதனை “உச்சிமேற் புயவர்கொள்” நச்சினர்க்கினியர், ‘நிறைமொழி” என்று தொடங்கும் நூற்பாவினை விளக்கி, அதற்கு எடுத்துக் காட்டை இதும்ப வரும்போது”ஆரியம் நன்று தமிழ்த் தென்உரைத்த
காரியத்தால் காலக்கோட் பட்டாளைச்.
.சிரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையால் செந்தமிழே தீர்க்க சிவா””
என்ற தமிழ்ப் பாட்டை வாழவைத்த மந்திரமாகவும், “முரணில் பொதியின் முதற்புத்தேன் வாழி
பரண கபிலரும் வாழி-அரனியல்ஆனந்த வேட்கையான் வேட்கோக் குபக்கொண்டான் ஆனந்தம் சேர்க சிவ”
என்ற தமிழ்ப் பாட்டை அழிக்கச் செய்த மந்திரமாகவும் காட்டினர். விளக்கம் கூறிய இடத்து, “இவை வாயில் தீறவாப் த2 பட்டி மண்டபத்தார் பொருட்டு, நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம்” என்று விளக்கம் காட்டினர்.
ஈண்டு, தீர்க்க என்பது உயிர்பெற்று எழுக என்பதையும், ஆனந்தம் சேர்க என்பது இறக்க என்பதையும் குறித்து நிற்கின்றன. திருஞானசம்பந்தர் பாடல்களில் ஓன்மும். செய்ய னேதிரு வாலவாய் மேவிய ஐயனேஅஞ்சல் என்றருள் செய்யெனைப் பொய்ய ராம் அம ணர்கொளு வும்சுடர் பைய வேசென்று பாண்டியற் காகவே
என்பது, பாண்டியனை வெப்பு நோய் பற்றுமாறு பணித்த பாடமாகும்.
வாழ்க அந்தனர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குன
ஆழ்க தீய தெலாம்அரன் நாமமே
சூழ்க வைய கமும்துபர் தீர்கவே
என்பது பாண்டியன் நெடுமாறனது கூன்நிமிரக் கருணையுடன்
கூறியதாகும்.
வேதங்களால்
பூசிக்கப்பட்டுப்
பின் சாத்தப்பட்ட
திருமறைக்காட்டுக் கோயில் கதவை அப்பர்,
அரக்க ளைவிர லால்அடர்த் திட்டார்
இரக்கம் ஒன்றினீர் எம்பெரு மான்கீரே
சுரக்கும் புள்ளைகள் சூழ்மறைக் காடரோ சரக்க இக்கத வம்திறப் பில்மினே
என்று பாட, மூடி இருந்த சுதவு இறக்கப்பட்டது.
சுந்தரர் அவிநாசி’ ‘என்னும் தலத்தைத் தரிசிக்க வந்த போது, தம் பிள்ளையை முதன் உண்ட காரணத்தால் அழுது கொண்டிருந்த பெற்றேர்கள் மகிழும் வண்ணம், இறை வளை நோக்கி, உரைப்பார் உரையுகந் துள்கவல்லார் தங்கள் உச்சியாய் அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளி பூர்அவி ஈாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லுகா லனையே என்று பாடுதலும், முத,ை தான் உண்ட பாவனைக் கரையில் கக்கிச் சென்றது.
இங்ஙனம் பல அற்புதங்களைத் தமிழ்ப் பாடல்களைக் கொண்டே நம் முன்னோர்கள் செய்துள்ளனர். இதனால் நாம் அறிவது யாது? மந்திர சக்தி தமிழ் மொழிக்கு உண்டு என்பதும் தமிழ் மொழி மந்திரங்களைக் கொண்டுள்ளது என்பதும் நமது சமயாசிரியர்கள் வாக்கெல்லாம் தமிழ்மறை என்பதும் புலனாதல் காண்க. நால்வர் வாக்குகளும் வேத
வாக்கு என்பதை ஒரு புலவர்.
‘சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும்நம் சுந்தரனும் சிற்கோல வாதவூர்த் தேசிகனும் முற்கோலி வர்திலரேல் கீறெங்கே மாமறைநூல் தான்எங்கே எந்தைபிரான் ஐந்தெழுத்தெங் கே?” என்றனர்.
இதுவரை விளக்கிய செய்திகளால் நாம் அறிவது யாது? அதுதான் தமிழ் மொழியிலும் மந்திரங்கள் உண்டு என்ப தன்ஞே?
வடமொழி வேத மந்திரங்களில் காணப்படாத அரிய பெரிய குறிப்புக்களைத் தமிழ்வேதமாகத் திருமாலியர்கட்டூரிய (வைஷ்ணவர்) ஆழ்வார்களின் தமிழ்த் திருப்பாட்டாகிய மந்திரங்களில் கண்டதை, அவர்கள் “தெளியாத ஐயங்களைச் இசந்தமிழில் தெளியக் காணலாம்” என்றும் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லியுள்ளனர்.
Author | – |
Language | Tamil |
No. of Pages | 386 |
PDF Size | 3 MB |
Category | Education |
Source/Credits | tamildigitallibrary.in |
Related PDFs
Andal Thiruppavai PDF In Tamil
Seerapuranam Song Description PDF In Tamil
Seerapuranam Song Description PDF In Tamil
தமிழ் மந்திரங்கள் -Tamil Mantras PDF Free Download