‘பஜனை பாடல் புத்தகம்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Bhajani Song’ using the download button.
முருகன் பஜனை பாடல் புத்தகம் – Bhajani Song PDF Free Download
பஜனை பாடல் புத்தகம் PDF
(முருகா முருகா முருகா …… ஓம்
முருகா முருகா முருகா …… ஓம்)
வள்ளி நாயக ஷண்முகனே
வடிவேல் ஏந்திடும் ஷண்முகனே (…… முருகா)
வைத்தியநாதன் திருமகனே
வரமதை வழங்கிடும் குருபரனே (…… முருகா)
தையல் நாயகி மகிழ் மகனே
ஐயன் எனையாள் ஆறுமுகனே (…… முருகா)
வழிபடும் அடியவர் வாழ்ந்திடவே
வழங்கிடுவாய் நல்ல அருள்தனையே (…… முருகா)
குமரா முருகா குருபரனே
குறைகளை எல்லாம் தீர்ப்பவனே (…… முருகா)
கருணையைப் பொழிந்திடும் கந்தனே வா
கதிதனைத் தந்திட வா வா வா (…… முருகா)
பக்தியைத் தந்திட வா வா வா
பரமகுருபரனே வா வா வா (…… முருகா)
ஆண்டருள் செய்வாய் ஆறுமுகா
ஆதரித் தருள்வாய் ஆறுமுகா (…… முருகா)
பாடும் பணியே பணியாக
பார்த்தருள் புரிவாய் பரம்பொருளே (…… முருகா)
தொழுவார் துயர்களைத் துடைத்திடவே
தோகை மயிலில் வந்திடுவாய் (…… முருகா)
வறுமையும் பிணியும் வாட்டிடுவாய்
வாழ்வில் நலமே வழங்கிடுவாய் (…… முருகா)
துன்பங்கள் எல்லாம் துடைத்திடுவாய்
இன்பங்கள் எல்லாம் ஈந்திடுவாய் (…… முருகா)
ஆடிடும் மயிலில் அமர்ந்திடுவாய்
அமைதியும் இன்பமும் அருளிடுவாய் (…… முருகா)
நாட்டில் நலங்கள் பெருகிடவே
நல்லருள் தன்னை நல்கிடுவாய் (…… முருகா)
தெய்வ நலங்கள் பெருகிடவே
தெய்வமே நல்லருள் தந்திடுவாய் (…… முருகா)
உன்னை வணங்கிடும் உத்தமர்கள்
உலகினில் உயர்ந்திடச் செய்திடுவாய் (…… முருகா)
வாழ்ந்திடுவோரை வாழவைப்பாய்
வாழ்வில் நலமே பெருகவைப்பாய் (…… முருகா)
சைவமதம் என்றும் வாழ்ந்திடவே
சைவமுதற் குரு அருள்புரிவாய் (…… முருகா)
உன்னையே சிந்தனைச் செய்திடுவோர்
உலகினில் ஏனோ உழல்கின்றார் (…… முருகா)
குமரா என்றுனைக் கும்பிடுவோர்
குடும்பம் தழைக்கச் செய்திடுவாய் (…… முருகா).
Author | – |
Language | Tamil |
No. of Pages | 26 |
PDF Size | 12.1 MB |
Category | Religious |
Source/Credits | noolaham.ne |
Related PDFs
Andal Thiruppavai PDF In Tamil
Vishnu Sahasranamam PDF In Telugu
श्री शनि देव चालीसा PDF In Hindi
Seerapuranam Song Description PDF In Tamil
Seerapuranam Song Description PDF In Tamil
முருகன் பஜனை பாடல் புத்தகம் – Bhajani Song PDF Free Download