ஆண்டாள் திருப்பாவை | Andal Thiruppavai PDF In Tamil

‘திருப்பாவை’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Andal Thiruppavai’ using the download button.

ஆண்டாள் திருப்பாவை – Andal Thiruppavai PDF Free Download

மார்கழித் திங்கள்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால், நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்,

ஏரார்ந்த கண்ணி யசோதை பிளஞ்சிங்கம், கார்மேனிச்செங் கண்கதிர்மதியம்போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

“அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சிநிற்குத் தன்மையளாய் -பிஞ்சாய்ப் பழுத்தாளை பாண்டாளைப் பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து””.

தமிழ்நாட்டில் மிகப்பெரும் சமயங்களில் சைவமும், வைணவமும் தொன்மைமிக்க சமயங்களாகும்.

‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்ற தொல்காப்பிய நூற்பாவின் படி, பண்டையோர் காடும் காட்டைச் சார்ந்த முல்லை நிலத்திற்குத் தெயவமாக ‘மாயோன்’ என வழங்கும் திருமாலைக் கொண்டனர்.

மேலும் தொல்காப்பியனார் புறத்திணை இயலில் பூவை நிவை” என்று குறிப்பிடுவதும் காயாம்பூ வண்ணனாகிய திருமாலைக் குறிக்கும்.

சங்க இலக்கியங்களில் திருமாலைய பற்றிய செய்திகள் நிறைய உண்டு. நற்றிணையின் சுடவுள் வாழ்த்துச் செய்யுள் மாயோனைப் பற்றியதாகும்.

‘மாதிலம் சேவடியாக’ என்று தொடங்கி, ‘தீதற விளங்கிய திகிரியோனே” என முடியும் அப்பாடலில் திருமாலின் பாத்துவம் பேசப்படுகின்றது.

கி.பி.ஆறாம் நூற்றாண்டு தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைத் தமிழில் ‘பக்தி இயக்கக் காலம்’ என்பர்.

இக்காலத்தே நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்து பக்திப் பாடல்களைப் பாடி மக்கட் சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சியினை ஏற்படுத்தினர்.

கி.பி. எட்டாம். நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் சுருதப்படும் பெரியாழ்வார் ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருக்கோயில்

கொண்டிரு க்கும் வடபத்தரசாயி என வழங்கும் வடபெரும் யிலுடையானிடத்தில் ஆராத அன்பு கொண்டு உருகினார்.

திருமால் பக்தியில் ஆழங்கால்பட்டுத் தோய்ந்த இவ்வாழ்வாரின் வளர்ப்பு மகளே கோதையென்றும்,

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியென்றும், ஆண்டாள் என்றும் அன்போடு க்கப்பெறும் திருப்பாவை பாடிய செந்தமிழ்ச் செல்வி கோதை நாச்சியார் ஆவர்.

இவர் திருப்பாவை முப்பது பாடல்களையும், நாச்சியார் திருமொழி தூற்று நாற்பத்து மூன்று பாடல்களையும் பாடியவர் ஆவர்,

திருப்பாவை ஜீவாத்மாக்கள் பரமாதமாவை நாடும் சமயப் பொருண்மையை அடிப்படையாகக் கொண்டது.

வைணவப் பெரியவராகிய ஸ்ரீ இராமாநுஜர் திருப்பாவையில் பெரிதும் ஈடுபட்ட காரணத்தினால் ‘திருப்பாவை ஜீயர்’ என்று அழைக்கப்பட்டார்.

வேதாந்த தேசிகரும் திருப்பாவையில் ஈடுபாடு கொண்டவர் ஆவா.

விஜயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயர் ‘ஆமுக்த மால்யதா’ என்னும் தெலுங்கு நூலில் ஆண்டாளைக் குறிப்பிட்டுள்ளார்.

பாவையர், பாவை பிடித்து வைத்துக் கொண்டாடிய பாவை நோன்பை ஒட்டித் திருப்பாவை என்னும் பிரபந்தம் தோற்றம் கொண்டுள்ளது.

இதனால் ‘பாவை பாடிய பாவை” என்றும் ஆண்டாளைக் குறிப்பிடலாம். பாவைப் பிரபந்தத்தின் உள்ளீடாக, மழை பெயது நாடு செழி

AuthorAndal
Language English
No. of Pages110
PDF Size9.95 MB
CategoryReligious

Thiruppavai Audio MP3

Related PDFs

आरती कुंजबिहारी की PDF In Hindi

श्री सरस्वती चालीसा PDF In Hindi

Mangalashtak Shloka PDF In Sanskrit

ஆண்டாள் திருப்பாவை – Andal Thiruppavai Book PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!