தமிழ் கதைகள் சிறுகதைகள் | Tamil Short Stories PDF

‘சிறுவர் கதைகள்’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘தமிழ் சிறு கதைகள்’ using the download button.

தமிழ் கதைகள் சிறுகதைகள் – Tamil Short Stories PDF Free Download

தமிழ் கதைகள் சிறுகதைகள்

முட்டாள் வணிகன் – A Foolish Merchant Moral Story:-ஒரு ஊருல ஒரு வியாபாரி இருந்தாரு,அவருக்கு ஒரு மகன் இருந்தான் அவனுக்கு படிப்பறிவே இல்லாம முட்டாளா இருந்தான்

கொஞ்ச காலத்துக்கு அப்புறமா அந்த வியாபாரி இறந்து போனாரு ,அவருக்கு அப்புறமா அந்த கடையை அவரோட மகன் எடுத்து நடத்த ஆரம்பிச்சான்

பக்கத்துக்கு கடை காரர்கள் எல்லாரும் ஒருநாள் சந்தைல பேசிகிட்டு இருந்தாங்க,அப்ப ஒரு வியாபாரி சொன்னாரு எண்ணை விலை எல்லாம் ஏறிடும் போல இருக்கு

அதனால எல்லாரும் எண்ணய விக்காம எல்லாத்தையும் பதுக்குனா ,அடுத்த மாசம் நல்ல லாபத்துக்கு விக்கலாம்னு ஒரு வியாபாரி சொன்னாரு

உடனே தன்னோட கடைல இருந்த எல்லா எண்ண பீப்பாயையும் எடுத்துட்டு வீட்டு தோட்டத்துக்கு வந்தான் அவன்

முட்டாளான அவன் ஒரு பெரிய குழிய வெட்டி பீப்பாய திறந்து அந்த எண்ணெய எல்லாம் அந்த குழியில ஊத்துனான்

குழியிலே விழுந்த எண்ணெய் எல்லாம் வீனா போச்சு,அந்த விஷயத்த தெரிஞ்ச எல்லாரும் அவன முட்டாள் வியாபாரினு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க

குளிருக்கு பரிசு அக்பர் பீர்பால் கதை- Birbal and Kichadi – Tamil Kulanthaigal Kadhai:ஒருநாள் அக்பரும் பீர்பாலும் அரண்மனை மாடியில உக்காந்து பேசிகிட்டு இருந்தாங்க ,அப்ப ரொம்ப குளிர் அடிச்சது ,உடனே அரசர் அடடா எவ்வளவு குளிரடிக்குது என்னாலேயே தாங்கமுடியலைனு சொன்னாரு.

உடனே பீர்பால் சொன்னாரு ஆமாம் அரசே ரொம்ப குளிருது ,ஆனா இதைவிட அந்த ஆத்து குள்ள இறங்குனா ரொம்ப குளிரும் யாராலயும் தாங்கவே முடியாதுனு சொன்னாரு

உடனே அக்பர் அப்படி ஆத்து தண்ணியில நின்னு குளிர் தங்குறவருக்கு பரிசுன்னு அறிவிக்க சொன்னாரு

இத கேள்விப்பட்ட ஏழை விவசாயி ஒருத்தரு அரண்மனைக்கு வந்து தான் போட்டியில கலந்துகிறதா சொன்னாரு

உடனே அவருக்கு ரெண்டு காவல்காரங்களை நியமிச்சி கூடவே இருந்து அவர் குளிரை தாங்குறாரான்னு பாத்துகிட சொன்னாரு அரசர்

ரொம்ப கஷ்டப்பட்டு குளிர்ந்த நீர்ல இருந்த அந்த விவசாயி மறுநாள் அரசரை பாத்து பரிசு கேட்டாரு ,

அதுக்கு அக்பர் நீ எப்படி அவ்வளவு குளிர தாங்குனனு கேட்டாரு

அதுக்கு அந்த விவசாயி சொன்னாரு அரசே எனக்கு தனிமையா இருக்குறது மட்டும்தான் பயமா இருந்துச்சு அதனால அரண்மனை வாசல்ல இருக்குற விளக்கை பாத்துகிட்டே குளிரை தாங்குனேனு சொன்னாரு

அதுக்கு அரசர் ஓஹ் அரண்மனை விளக்குல குளிர் காஞ்சிகிட்டே போட்டியில கலந்துக்கிட்டியா ,உனக்கு பரிசு கிடையாதுன்னு சொல்லி வெளியில அனுப்பிச்சிட்டாரு

இத கேள்விப்பட்ட பீர்பால் அரசருக்கு நல்ல புத்தி சொல்ல நினைச்சாரு ,உடனே அரசரை தன்னோட வீட்டுக்கு இரவு விருந்துக்கு அழைச்சாறு

அன்னைக்கு ராத்திரி அரசர் பீர்பாலோட வீட்டுக்கு போனாரு ,ரொம்ப பசியா இருந்த அரசர் வேகமா உணவு பரிமாற சொன்னாரு ,ஆனா பீர்பால் உணவு இன்னும் வேகலைனு சொன்னாரு

இத கேட்ட அக்பருக்கு கோபம் வந்துடுச்சு ,நெருப்பு நிறய மூட்டி உடனே உணவ தயாரிக்க சொன்னாரு

அதுக்கு பீர்பால் சொன்னாரு நெருப்பா ,நான் அரண்மனை விளக்கு வெளிச்சத்துலல உணவு சமைச்சிக்கிட்டு இருக்கேனு சொன்னாரு

இத கேட்ட அரசருக்கு உண்மை புரிய ஆரம்பிச்சது ,பீர்பால் சொன்னாரு அரண்மனை விளக்கு வெளிச்சத்துல ஒருத்தர் ராத்திரி முழுசும் தண்ணில இருக்க முடியும்னா நம்மளால சமைக்கவும் முடியும்லன்னு கேட்டாரு

தன்னோட தவறை உணர்ந்த அரசர் ,அந்த விவசாயிய வரவச்சு பரிசு கொடுத்து அனுப்புனாரு

Language Tamil
No. of Pages21
PDF Size0.75 MB
CategoryGeneral
Source/Credits

Related PDFs

Durga Amman Songs PDF

Herbs And Their Uses PDF In Tamil

Siddhas Are Mantras PDF In Tamil

தமிழ் கதைகள் சிறுகதைகள் – Tamil Short Stories PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!