இந்திய தண்டனைச் சட்டம் – IPC Sections List Tamil PDF Free Download

இந்திய தண்டனைச் சட்ட தொகுப்பு
INDIAN PENAL CODE
அத்தியாயம் – 1
இந்தியா முழுவதற்கும் பொதுவான ஒரு குற்ற இயல் சட்டத்தொகுப்பு மிகவும் அவசியம் என்று கருதி கீழ் கண்டவாறு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் 1860-ஆம் உருவாக்கப்பட்டது. இதை மெக்காலே பிரபுவும் அவரைச் சேர்ந்த நான்கு சட்ட நிபுணர்களும் உருவாக்கினார்கள் இந்த சட்டத்தில் 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் உள்ளன.
- பெயரும் எல்லையும் (Title and extent of operation of the code):
“இந்தியத் தண்டனைச் சட்ட தொகுப்பு” என்று இந்தச் சட்டம் அழைக்கப்படும். ஜம்மு. காஷ்மீர் பிரிவுகள் நீங்கலாக உள்ள இந்தியா முழுமைக்கும். இந்த சட்டத்துக்கு வரம்பு உண்டு.
- இந்திய எல்லைக்குள் நடைபெறும் குற்றங்களுக்கு தண்டனை (Punishment of offences committed within India ):
இந்தியாவில் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் இந்த சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டுள்ளபடி தத்தமது நடவடிக்கைகளுக்கு ஏற்ப தண்டனை பெறுவர். சட்டப்படி செய்ய வேண்டியவற்றைச் செய்யாது விட்டாலும் குற்றமாகும். அவர்களை இந்தச் சட்ட பிடியின்றி வேறு எந்த விதமாகவும் தண்டிக்கலாகாது.
அத்தியாயம் – 2
(CHAPTER-2)
பொது விளக்கங்கள் (General Explanations)
Definition in the code to be understood subject to Exceptions
குற்றங்கள் ஒவ்வொன்றும் இந்தச் சட்டத்தின் கீழ் அவற்றுக்கு உரிய தண்டனைகளுடன் விளக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குறிய விதிவிலக்குகளும் தரப்பட்டுள்ளன. இந்த விதிவிலக்குகள், ‘பொது விதிவிலக்குகள்’. என்ற அத்தியாயத்தின் கீழ் விளக்கப்பட்டுள்ளன.
எனவே சட்டத்தைப் பயன்படுத்தும் போது விதி விலக்குகளுக்கு உட்படுத்திப் பயன்படுத்த
வேண்டும்
ஒவ்வோர் இடத்திலும் விதிவிலக்குகளை குறிப்படவில்லையே என்று ஒதுக்கிவிடக்கூடாது.
உதாரணம் :
குற்றங்கள் விளக்கி எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்தப் பிரிவிலும் ஏழு வயதுக்குக் குறைவான குழந்தை அந்தக் குற்றங்களை புரிந்தாலும், அதனை குற்றமாகக் கொண்டு தண்டனை அளிக்க முடியாது என்பதைக் குறிப்படவில்லை. ஆனால் சட்ட குறிப்புக்களைப் படிக்கும்போது, ஏழு வயதுக்கு குறைந்த குழந்தை அந்த குற்றத்தை செய்திருப்பினும் அதனை தண்டனைக்கு உரியதாகக் கருதக்கூடாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
Sense of Expression once explained:
ஒவ்வொரு சட்ட விதியும் ஆங்காங்கு விவரிக்கப்பட்டுள்ளது. எத்தகைய பொருள் கொள்ளப்பட வேண்டும் என்று ஓர் இடத்தில் விளக்கப்பட்டிருக்கிறதோ, அதே பொருளில் இந்த சட்டம் முழுவதிலும் அந்த பதம் பயன் படுத்தப்பட்டுள்ளது.
Genderஎன்று இந்தச் சட்டதில் குறிப்பிடப்படும் பகமும் அதன் பல்வேறு
Publisher | Government |
Language | English |
No. of Pages | 65 |
PDF Size | 0.5 MB |
Category | Law |
Related PDFs
இந்திய தண்டனைச் சட்டம் – IPC Sections List Tamil PDF Free Download