‘ஜவஹர்லால் நேரு பற்றிய பேச்சு போட்டி’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Speech on Jawaharlal Nehru Tamil’ using the download button.
ஜவஹர்லால் நேரு பற்றிய பேச்சு போட்டி – Speech on Jawaharlal Nehru Tamil PDF Free Download
ஜவஹர்லால் நேரு பற்றிய பேச்சு போட்டி
முன்னுரை
- இந்தியாவை இந்தியர்களால் ஆட்சி செய்ய முடியாது என்ற உலகத்தாரின் வார்த்ததைகளை மாற்றி காட்டிய தலைவர் ஆவார்.
- ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்தியாவில் முதன் முதலில் மக்கள் மத்தியில் ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் புதிய வரலாற்றை துவங்கி வைத்த தலைவர் எனும் பெருமையை இவர் பெறுகிறார்.
- சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையுடையவரும் குழந்தைகளால் நேரு மாமா என அழைக்கப்படுகின்ற ஜவர்கலால் நேருவை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும் வாழ்க்கையும்
- இவர் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் இல் பிறந்தார்.
- பெரிய செல்வந்தரான மோதிலால் நேரு அவர்களுக்கும் ஸ்வரூபராணி அம்மையாருக்கும் மூத்தமகனாக இவர் பிறந்தார். விஜயலக்ஷ்மி, பண்டித் கிருஸ்ணா என்ற இரு சகோதரிகள் இருந்தனர்.
- தனது ஆரம்ப கல்வியை இந்தியாவில் முடித்து விட்டு மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றார். இங்கிலாந்தில் 1910 இல் பட்டப்படிப்பை முடித்தார்.
- கமலாகௌர் என்ற பெண்ணை இவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு இந்திரா, பிரியதர்சினி என்று பெண்குழந்தைகள் பிறந்தன.
சுதந்திரப் போராட்டம்
- 1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மகாத்மாகாந்தியை சந்தித்தார். “ஜாலியன் வாலாபாக்” சம்பவத்தின் பின்னர் இவர் அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார்.
- காந்தியின் நம்பிக்கைக்குரியவராகவும் மாறினார். 1921 இல் காந்தியினுடைய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதற்காக முதன் முதலாக சிறை சென்றார்.
- இவர் இந்திய தேசிய காங்கிரஸ் எனும் கட்சியை காந்தியின் வழிநடத்தலின் கீழ் தலைமையேற்றார். இவர் தனது வாழ்நாளில் ஒன்பது வருடங்களை சிறையில் கழித்தார்.
- சிறையில் இருந்தபடியே “உலகவரலாறு, தனது சுயசரிதை, இந்தியாவின் கண்டுபிடிப்பு” போன்ற நூல்களை எழுதினார். இவ்வாறு இந்தியாவின் சுதந்திரத்துக்காக முன் நின்று உழைத்தார்.
இந்தியாவின் முதல் பிரதமர்
- சுதந்திரமடைந்த இந்தியாவின் முதலாவது பிரதமராக மக்கள் ஆதரவோடு இவர் வெற்றி பெற்றார். இவர் பதவியேற்று தலைநகர் டெல்லியில் “விதியுடன் ஒரு போராட்டம்” என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை இந்திய மக்களால் மறக்கமுடியாதது.
- அந்த சந்தர்ப்பத்தில் பாக்கிஸ்தானின் பிரிவினை மற்று உள்நாட்டு மத கலவரங்கள் இவருக்கு சவாலாக இருந்தன.
- மாநிலத்திட்டம் பொருளாதார திட்டம் போன்றவற்றை இவர் உருவாக்கினார். இவரது திட்டங்கள் இன்றுவரை இந்தியாவின் ஆட்சியில் செல்வாக்கு செலுத்துகின்றது.
நேருவும் குழந்தைகளும்
- இவர் ஒரு மிகச்சிறந்த தலைவர் என்பதோடு குழந்தைகள் மீது அதிக அன்புடையவராகவும் விளங்கினார்.
- வருங்காலத்தில் இந்தியாவை குழந்தைகள் தான் மாற்றுவார்கள் என்று வெகுவாக நம்பினார்.
- இதனால் தான் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம், உணவு வழங்கும் திட்டம், கல்வி திட்டங்கள் என்பவற்றை சிறப்பாக மேற்கொண்டிருந்தார்.
- இவரது செயல்களால் அதிகம் குழந்தைகளுக்கும் மக்களுக்கும் பிடித்த ஒரு நல்ல அரசியல் தலைவராக இவர் திகழ்ந்தார்.
இவரது பணிகள்
- இந்தியாவை இந்தியர்களே ஆழ்வது சாத்தியமற்றது என்ற விமர்சனங்களை இவர் பொய் ஆக்கினார். இந்தியர்கள் மத்தியில் தேசப்பற்றை விதைத்து ஒற்றுமையான உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தை கட்டியெழுப்பினார்.
- முதன் முதலில் ஐந்து ஆண்டுகள் திட்டத்தை இவர் கொண்டுவந்தார்.
- அது பதவிக்கு வருகின்ற அரசாங்கம் அடுத்து வருகின்ற ஐந்து வருடங்களில் என்ன திட்டங்களை ஆற்ற வேண்டும் என்ற திட்ட முன்வரைவு ஆகும்.
- விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளின் முதலீடு என்ற இவரது திட்டம் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து வந்தது. தனியாரிடம் இருந்த கைத்தொழில்களை அரசாங்கமே நடாத்த இவர் திட்டமிட்டார்.
- இந்தியாவின் இளைஞர்களின் கல்வி வளர்ச்சியில் தான் இந்தியாவின் எதிர்காலம் தங்கியுள்ளது என்பதை உணர்ந்து கல்வி தொடர்பான திட்டங்களை அதிகம் நடைமுறைபடுத்தினர்.
முடிவுரை
- 17 ஆண்டுகள் இவர் இந்தியாவை வழி நடாத்தினார் நவீன இந்தியாவிற்கு தேவையான அடிப்டை விடயங்களை விருத்தி செய்ய இவரது திட்டங்கள் மிகவும் பயனுடையதாக அமைந்தது.
- இன்றளவும் இந்தியா உலக அரங்கில் சிறந்த நாடாக வளர்ச்சி பெறுவதற்கு இவரது பணிகள் அடிப்படையாக அமைந்தன.
- சுதந்திர இந்தியாவுக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார்.
- தன் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளதும் இளைஞர்களதும் கல்விக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த மிகச்சிறந்த தலைவராக இவர் இந்திய வரலாற்றில் அறியப்படுகிறார்.
Author | – |
Language | Tamil |
No. of Pages | 2 |
PDF Size | 0.2 MB |
Category | Art |
Source/Credits | Drive.google.com |
Related PDFs
Independence Day[15th August] Speech In English PDF
Independence Day Anchoring Script PDF
ஜவஹர்லால் நேரு பற்றிய பேச்சு போட்டி – Speech on Jawaharlal Nehru Tamil PDF Free Download