இந்திய அரசியலமைப்பு | Constitution Of India Tamil PDF

‘Indian Constitution Tamil’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘இந்திய அரசியலமைப்பு க.வெங்கடேசன்’ using the download button.

இந்திய அரசியலமைப்பு – Constitution of India Book PDF Free Download

Preamble

முன்னுரை:

இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை, சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசாக அதன் குடிமக்கள் அனைவருக்கும் நிறுவுவோம்.

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியைப் பெறுங்கள்

(சுதந்திரம்) சிந்தனை, சிந்தனை வெளிப்பாடு, நம்பிக்கை, பக்தி மற்றும் வழிபாடு;

தகுதி மற்றும் வாய்ப்பின் சமத்துவம், அனைவருக்கும் உத்தரவாதம், மற்றும் தனிநபரின் கண்ணியம்,

அனைவருக்கும் இடையே சகோதரத்துவத்தை (சகோதரத்துவம்) வளர்ப்பதற்கும், நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒற்றுமையை உறுதிப்படுத்தவும்

1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி, நமது அரசியலமைப்புச் சபையில், இந்த நாளில் உறுதியுடன் தீர்மானிக்கப்பட்டு, இந்த அரசியலமைப்பை சட்டமாக ஏற்றுக்கொண்டு இயற்றுகிறோம். நாமே வழங்கியது

இந்திய அரசமைப்பு

முகப்புரை

இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச்சார்பின்மையும் மக்களாட்சிமுறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும்,

அதன் குடிமக்கள் அனைவரும்

சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை,

சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும்,

அவர்கள் அனைவரிடையேயும்

தனிமனிதனின் மாண்பு, நாட்டுமக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும்

பகுதி 1

ஒன்றியமும் அதன் ஆட்சிநிலவரையும்

ஒன்றியத்தின் பெயரும் ஆட்சி நிலவரையும்:

() இந்தியா எனும் பாரதம், மாநிலங்களைக் கொண்டதோர் ஒன்றியமாக இருக்கும். (2) மாநிலங்களும் அவற்றின் ஆட்சிநிலவரைகளும் முதலாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு இருக்கும்.

(3) இந்தியாவின் ஆட்சிநிலவரை

(அ) மாநிலங்களின் ஆட்சிநிலவரைகளையும்,

(ஆ) முதலாம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளையும்,

அடையப்பெறும் பிற ஆட்சிநிலவரைகளையும்

உள்ளடக்குவது ஆகும்.

புதிய மாநிலங்களை ஏற்றிணைத்தல் அல்லது நிறுவுதல் :

நாடாளுமன்றம், தான் தக்கதெனக் கருதுகிற வரையுரைகள் மற்றும் வரைக்கட்டுகளுக்கு இணங்க, சட்டத்தினால், புதிய மாநிலங்களை ஒன்றியத்துள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிறுவலாம்.

1[2அ.

(அ) எந்தவொரு மாநிலத்திலிருந்தும் ஆட்சிநிலவரையைப் பிரித்தோ இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களை அல்லது மாநிலங்களின் பகுதிகளை ஒன்றிணைத்தோ மாநிலம் ஒன்றன் பகுதியுடன் ஆட்சிநிலவரை எதனையும் ஒன்றிணைத்தோ புதிய மாநிலம் ஒன்றை உருவாக்கலாம்;

எந்தவொரு மாநிலத்தின் பரப்பிடத்தையும் விரிவாக்கலாம்; எந்தவொரு மாநிலத்தின் பரப்பிடத்தையும் குறைக்கலாம்;

門 எந்தவொரு மாநிலத்தின் எல்லைகளையும் மாற்றலாம்; எந்தவொரு மாநிலத்தின் பெயரையும் மாற்றலாம்:

வரம்புரையாக: இதன்பொருட்டான சட்டமுன்வடிவு எதனையும், குடியரசுத்தலைவரின் பரிந்துரை மீதல்லாமலும், மேலும், அச்சட்டமுன்வடிவில் அடங்கிய செயற்குறிப்பு மாநிலங்களில் ஒன்றன் பரப்பிடத்தையோ எல்லைகளையோ பெயரையோ பாதிக்குமிடத்து, அச்சட்டமுன்வடிவு,

குடியரசுத் தலைவரால் அந்த மாநிலச் சட்டமன்றத்திற்கு, அச்சட்டமுன்வடிவு மீதான அதன் கருத்தினை, அவர் குறித்துரைக்கும் காலஅளவிற்குள்ளாகவோ அவர் அனுமதிக்கும் கூடுதலான காலஅளவிற்குள்ளாகவோ தெரிவிப்பதற்கெனக் குறித்தனுப்பப்பட்டிருந்து,

அவ்வாறு அதில் குறித்துரைக்கப்பட்ட அல்லது கூடுதலாக அனுமதிக்கப்பட்ட காலஅளவு கழிவுற்றிருந்தால் அன்றியும், நாடாளுமன்ற ஈரவைகள் எதிலும் அறிமுகப்படுத்துதல் ஆகாது.

விளக்கம் I. இந்த உறுப்பின் (அ) முதல் (உ) வரையுள்ள கூறுகளில், “மாநிலம்” என்பது, ஒன்றியத்து ஆட்சிநிலவரையையும் உள்ளடக்கும்; ஆனால், வரம்புரையில் “மாநிலம்” என்பது, ஒன்றியத்து ஆட்சிநிலவரையை உள்ளடக்குவதில்லை.

பகுதி II

குடிமை

அரசமைப்பின் தொடக்க நிலையில் குடிமை:

இந்த அரசமைப்பின் தொடக்கநிலையில், இந்திய ஆட்சிநிலவரையில் தம் நிலைவாழ்விடத்தைக் கொண்டிருப்பதுடன்

(அ) தாம் இந்திய ஆட்சிநிலவரையில் பிறந்தவராகவும், அல்லது

இந்திய ஆட்சிநிலவரையில் பிறந்தவரை, தம் பெற்றோரில் ஒருவராகக் கொண்டவராகவும், அல்லது

அந்தத் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்திய ஆட்சி நிலவரையில் தாம் வழக்கமாகக் குடியிருந்து வருபவராகவும் உள்ள ஒவ்வொருவரும்

இந்தியாவின் குடிமகன் ஆவார்.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்துள்ள குறித்தசிலரின் குடிமை உரிமைகள்.

5ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், பாகிஸ்தானில் இப்போது உள்ளடங்கியுள்ள ஆட்சிநிலவரையிலிருந்து இந்தியஆட்சிநிலவரைக்குக் குடிபெயர்ந்துள்ள ஒருவர்

(அ) தாமோ தம் பெற்றோரில் ஒருவரோ தம் பாட்டன் பாட்டியரில் ஒருவரோ (முதற்கண் இயற்றப்பட்டவாறான) 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் வரையறைசெய்யப்பட்ட இந்தியாவில் பிறந்தவர் என்பதுடன்,

(ஆ) (i) அத்தகையவர், 1948 ஜூலை பத்தொன்பதாம் நாளுக்கு முன்பு அவ்வாறு குடிபெயர்ந்துள்ள நேர்வில், அவர் தாம் குடிபெயர்ந்த தேதியிலிருந்து இந்திய ஆட்சிநிலவரையில் வழக்கமாக குடியிருந்துவருபவராகவும் இருப்பின், அல்லது

(ii) அத்தகையவர், 1948 ஜூலை பத்தொன்பதாம் நாளன்றோ அதற்குப் பின்போ அவ்வாறு குடிபெயர்ந்துள்ள நேர்வில், இந்தியாவின் குடிமகனாகத் தம்மைப் பதிவுசெய்து கொள்வதற்கென,

இந்தியத் தன்னாட்சிய அரசாங்கத்தினால் அதன்பொருட்டு அமர்த்தப்பெற்ற ஓர் அலுவலரிடம், அவ்வரசாங்கத்தினால் வகுத்துரைக்கப்பட்ட வடிவத்திலும் வயணத்திலும்,

இந்த அரசமைப்பின் தொடக்க நிலைக்கு முன்பு தம்மால் செய்துகொள்ளப்பட்ட ஒரு விண்ணப்பத்தின்மீது அத்தகைய அலுவலரால் அவ்வாறு பதிவுசெய்யப்பெற்றுள்ளவராகவும் இருப்பின்,

அவர், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையில் இந்தியாவின் குடிமகன் எனக் கொள்ளப்பெறுவார்:

வரம்புரையாக: ஒருவர், தாம் விண்ணப்பித்த தேதியை ஒட்டி முன்பு குறைந்தது ஆறு மாதங்களேனும் இந்திய ஆட்சிநிலவரையில் குடியிருந்தவராக இருந்தாலன்றி, அவரை அவ்வாறு பதிவுசெய்தல் ஆகாது.

7 பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துள்ள குறித்தசிலரின் குடிமைஉரிமைகள்:

5, 6 ஆகிய உறுப்புகளில் எது எவ்வாறிருப்பினும், இந்திய ஆட்சிநிலவரையிலிருந்து,

பாகிஸ்தானில் இப்போது உள்ளடங்கியுள்ள ஆட்சிநிலவரைக்கு, 1947 மார்ச்சு முதலாம் நாளுக்குப் பின்பு குடிபெயர்ந்துள்ள ஒருவரை இந்தியாவின் குடிமகன் எனக் கொள்ளுதல் ஆகாது:

Author
Language Tamil
No. of Pages297
PDF Size59 MB
CategoryGovernment
Source/Creditslegislative.gov.in

இந்திய அரசியலமைப்பு – Constitution of India Book PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!