குடியரசு தின உரை | Republic Day Speech PDF In Tamil

‘குடியரசு தின உரை’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Republic Day Speech’ using the download button.

Republic Day Speech PDF Free Download

republic-day-speech-in-tamil

குடியரசு தினம் பேச்சு போட்டி

பல உயிரை தியாகம் செய்து இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்று தந்தவர்கள் பலர். இந்தியாவில் சுமார் 200 நூற்றாண்டிற்கும் மேல் ஆங்கிலேயரின் ஆட்சி காலம் இருந்து வந்தது. பல தேச தலைவர்கள் தமது தாய் நாட்டிற்காக அஹிம்சை வழியில் பல போராட்டங்களை நடத்தி இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்று கொடுத்து சென்றுள்ளார்கள். அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையிலே வருடா வருடம் ஜனவரி மாதம் 26-ம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டிற்கு கிடைத்த மாபெரும் சுதந்திரத்தை பள்ளிகளில் பல பேச்சு போட்டி நிகழ்ச்சிகள், பல கட்சி தலைவர்கள் பேச்சு உரையாடல் நடத்தி அன்றைய தினத்தில் இனிப்புகளை வழங்கி கொண்டாடுவார்கள்.

ஆங்கிலேயரின் ஆட்சி காலம்

மன்னர்கள் ஆட்சி செய்து வந்த காலத்தில் இந்தியாவிற்குள்ளே சிறு சிறு பகுதிகளாக பிரித்து வாழ்ந்து வந்தார்கள். இதனை தெரிந்துகொண்ட ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டில் வணிகம் செய்ய ஆரம்பித்தார்கள். பின்னர் இந்தியாவினை அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொடுங்கோல் ஆட்சியை மேற்கொண்டு வந்தார்கள் ஆங்கிலேயர்கள். இந்தியர்கள் 200 ஆண்டுகள் ஆங்கிலேயரின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த இந்தியா

நாளுக்கு நாள் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்களை நாட்டை விட்டே வெளியே அனுப்புவதற்கு முடிவு செய்தார்கள். பிறகு நாடு முழுவதும் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தை நடத்த தொடங்கினார்கள். அதன் தொடக்கமாக ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக நடத்தினார்கள். இந்தியர்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய நாட்டிற்கு விடுதலை கிடைத்தது.

குடியரசு என்பதற்கு அர்த்தம்

குடியரசு என்பதற்கு சரியான அர்த்தம் மக்களாட்சி ஆகும். மக்களாட்சி என்பது தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர்.

குடியரசு தினம் கொண்டாடப்பட்ட முதல் தினம் எது?

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே காந்தியடிகள் இந்திய நாட்டின் குடியரசு நாளினை ஜனவரி 26 அன்று கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தார். இதனை கருத்தில் கொண்ட இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26 முதல் இந்தியா குடியரசாக மாறும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து ஜனவரி 26,1950-ஆம் ஆண்டு முதல் குடியரசு நாள் அன்று இந்தியக்கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களில் இந்தியா முழுவதும் கொடியேற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, குடியரசு தினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். தம்முடைய தாய் நாட்டை காப்பதற்கு பல உயிர்களை தியாகம் செய்த தியாகிகளுக்கு நன்றி கூறும் வகையில் அனைத்து பள்ளி கூடங்களில், கல்லூரிகளில், அரசு அலுவலகம் போன்ற இடங்களில் தேசிய கொடியை நாள் முழுவதும் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுவார்கள். சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் இந்தியர்கள் என்று கூறிக்கொள்ள நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

Author
Language Tamil
No. of Pages6
PDF Size0.1 MB
CategoryArt
Source/Creditspdffile.co.in

Republic Day Speech PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!