மனையடி சாஸ்திரம் – Manaiyadi Shastra Panchangam Book PDF Free Download

நிமித்தங்கள்
(சுவடிச் செய்தியின் சுருக்கம்)
இறை வணக்கம்
நான்கு வேதங்களாகி விளங்குபவன் இறைவன்; முமீ மூர்த்திகளாகிய வடிவெடுத்து நிற்பவன் அவன்;
முத் தொழிலை நிகழ்த்துபவனும் இறைவன்; முத்தொழிலை நிகழ்த்துவதற்காக இவ்வுலகிளைத் தோற்றுவித்தவனும் அவனே.
அவ் இறைவனின் திருவடித் தாமரைகளை வணங்கி, தேவதச்சன் என்று கூறப்படும் சிற்பியாகிய மயன் என்பவர்
வடமொழியிலே செய்துள்ள மனைநூலினைத் தமிழிலே சொல்லுகிறேன் என்று இறைவணக்கம் கூறி நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர்.
அவையடக்கம்
பழமும் நெய்யும் பாலும் கற்கண்டும் சர்க்கரையும் கலந்த உயரித்த உணலில் கல் கலந்து கிடக்குமானால் சான்றோர் கல்உணவு என்று அதனை விலக்கி விட மாட்டார்கள்;
அந்தச் சிறு கல்லைக் கண்டு நீக்கிவிட்டு உணவை இனிய உணவாகவே ஏற்றுக்கொள்வார்கள்.
அதுபோல புல்லறி வானாகிய நாள் செய்யும் இந்தூலுள் பிழை காணப் படினும்,
சான்றோர் அப்பிழையினை நீக்கி உயர்ந்த நூலாகவே ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஆசிரியரின் அவையடக்கக் கருத்து.
நிமித்தம் (சகுனம்)
இல்லத்திற்கு உரியவள் வந்து மனைகோல வேண்டும் என்று சிற்பியை அழைக்கிறான்.
சிற்பியும் மனைக்கு உரியவனுமாக மனியை தோக்கிச் செல்லுகிறார்கள். அவ்வாறு செல்லும்போது எதிரில் ஆண்கள், பெண்கள்
பிற உயிர்கள் வருவதையும், அவர்கள் பிற பொருள் களோடு வருவதையும் திமித்தம் என்று கூறுகிறது மனை நூல்,
அப்படி வரும் திமித்தங்களுக்கு ஏற்ப மனையில் நன்மை, தீமைகள் உண்டாகும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மையாக ஏற்கப்படுகின்றது.
அவ்வாறு ஏற்படும் நிமித்தத்தின் நள்மை தீமைகள் தொகுத்துத் தரப்படுகின்றன. தன்மை தரும் திமித்தங்கள்
அழகு வாய்த்த மகளிர் எதிரில் வந்தால் தல்ல
யோகம் உண்டாகும். 2. நிறைகுடம், தயிர்க்குடம், பால்குடம், சோறு, மதுக் குடம், சாரைப்பாம்பு, கரும்புக்கட்டு,
பருவமகளிர், தேவு தாசி, வண்ணான், இரட்டைப் பார்ப்பனர் போன்ற நிமித் தங்கள் எதிரில் தோன்றினால் மிகவும் நன்மை உண்டாகும்.
அணில், ஓந்தி, கழுதை, கிளி, கொக்கு, கோழி, செம்போத்து. நரி, நாரை, பசு. மயில், மாடு, மான், முயல்,
வேங்கைப்புலி ஆகியவை தாம் மனைகோவப் புறப்படும் போது எதிரில் தமக்கு இடது பக்கத்திலிருந்து வலதுபக்க மாகச் சென்றால் மிகவும் நன்மை உண்டாகும்.
Author | P. Subramaniam |
Language | Tamil |
No. of Pages | 331 |
PDF Size | 278.4 MB |
Category | Education |
மனையடி சாஸ்திரம் – Manaiyadi Shastra Book PDF Free Download