பொன்னியின் செல்வன் | Ponniyin Selvan PDF In Tamil

பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book PDF Free Download

அத்தியாயம் 1 – ஆடித்திருநாள்

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம்.

விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செய்வோமாக.

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில்,

தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது.

அதற்கு வீரநாராயன ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அலைமும் உள்ளது.

காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏர் என்ற பெயரால் வழங்கி வருகிறது.பது

வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண

எரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காயத்தில் சாதித்த

அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது.

நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்?

தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும்

ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண

ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குவத்தைச் சேர்ந்தவன் வrல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.

நெடுந்தூரம் பிரமாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது,

அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அய்வாவாக “சீகரித்திருந்தது.

ஆடிப் பதினெட்டாம் பெருகைன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வென்பாம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஒடுவது வழக்கம்.

அந்த நதிகளிலிருந்து பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம்,

வட காவேரி என்று பக்தர்னோலும் கொள்ளிடம் என்று பொது ாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து

வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது.

அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுமுவென்று பாய்ந்து

சுற்றுப் பக்கத்தில் ‘நெடுத்தாத்துக்கு நீர்வளத்தை கணித்துக் கொண்டிருந்தது அந்த மரித் தண்ணிக் கொண்டு

கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌசியும் நடவும் நடந்து கொண்டிருந்தன.

உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேனை களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான்.

எரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா

என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான்.

ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.

AuthorKalki Krishnamurthy
Language Tamil
No. of Pages1940
PDF Size11.1 MB
CategoryNovel

Ponniyin Selvan MP3 Download Here

பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *