அபிராமி அந்தாதி | Abirami Anthathi PDF In Tamil

‘அபிராமி அந்தாதி’ PDF Quick download link is given at the bottom of this article. You can see the PDF demo, size of the PDF, page numbers, and direct download Free PDF of ‘Abirami Anthathi’ using the download button.

அபிராமி அந்தாதி – Abirami Anthathi PDF Free Download

நல்வித்தையும் ஞானமும் நல்குவாய் தாயே

மூலம்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது,

மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே

எளிய தமிழில்

உதயக்கதிராய் சிவந்த நெற்றியில் இதயங்கவர் உச்சிச்சிந்தூரம் சிவக்க மனமகிழும்

மாணிக்கம் ஜொலிக்க கொடிமேனி குங்குமமாய்க் கனியும் அன்னை அபிராமியே என்துணை

பிரிந்தவர்தமை இணைத்து வை தாயே மூலம்

துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், கருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட

வேரும்-பனி மலர்ப்பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

எளிய தமிழில்

துணை நீயே தெய்வமே தாயே இணை நீயே வேதத்தில் தொழிலே கிளை நீயே லேரே

மலரே ஞானமே கணை மலர் வில் பாசமங்குசம் தரி துணை திரிபுரசுந்தரி அறிந்தேனே

ஸம்ஸார பந்தம் நீக்கு தாயே! மூலம்

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.-

வெருவிப் பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால், மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

எளிய தமிழில்

அறிந்தேனுனை ரஹஸ்ய மந்திரமாய் புகுந்தேன் சரண் உன்திருவடி தஞ்சமாய் உணர்ந்தேன் உன்பெருமை யதியாச் சிறுமை.

விழுந்தேன் இரண்டறக் கலந்தேனுன் பாதம் பிரிந்தேன் உளையறியா மனிதரை

உயர்பதவிகள் பல தருவாய் தாயே மூலம்

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே.

கொன்றை வார்சடைமேல் பனிகரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

எளிய தமிழில்

மனிதர் தொடங்கி தேவர் முனிவர் வரை மேன்மையாய் உயர்த்திடு முன்சேவடி, சடை மதி சர்ப்பம்

கங்கை சூடியவுன் மணாளனுடன் அவன் மங்கை நீயும் சதாயென் சிந்தை யுறைவாய்.

AuthorJawahar Kannan
Language Tamil
No. of Pages115
PDF Size1.8 MB
CategoryReligious

அபிராமி அந்தாதி – Abirami Anthathi PDF Free Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!